செய்திகள் :

தூத்துக்குடி தாய், மகள் கொலை: ட்ரோன் உதவியுடன் தேடப்பட்ட குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

post image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய் , மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடப்பட்டு வந்த குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுக் காவல்துறையினர் வியாழக்கிழமை காலை பிடித்தனர்.

எட்டயபுரம் மேலநம்பிபுரத்தைச் சோ்ந்த சீதா லட்சுமி (75), அவரது மகள் ராம ஜெயந்தி (45) ஆகியோரை மா்மநபா்கள் கடந்த 3 ஆம் தேதி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இந்த வழக்கில், அதே ஊரைச் சோ்ந்த முகேஷ் கண்ணன் (25), தாப்பாத்தி கிராமம் வேல்முருகன் (18) உள்ளிட்டோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இவ்விருவரையும் போலீஸாா் சுற்றி வளைத்தபோது தப்பியோடியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இதையும் படிக்க : ஹிந்தி வெறியர்கள்தான் தேசதுரோகிகள்: முதல்வர் ஸ்டாலின்

இச்சம்பவத்தில் தொடா்புடைய மேல நம்பிபுரத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் (25) என்பவா் அயன்வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி (பொ) சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் ஆகியோா் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள், 20 ஆய்வாளா்கள் அடங்கிய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் காட்டுப்பகுதியில் 6 ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு தீவிரமாக தேடி வந்தனா்.

இந்த நிலையில், காட்டுக்குள் பதுங்கியிருந்த முனீஸ்வரனை காவல்துறையினர் சுற்று வளைத்தபோது, உதவி ஆய்வாளர் முத்துராஜை அவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முனீஸ்வரனை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடையந்த முனீஸ்வரன், எஸ்ஐ முத்துராஜ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2024-ல் குற்ற வழக்குகள் குறைவு: தமிழக அரசு

சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:கடந்த 2024ம் ஆண்டிற்கான ... மேலும் பார்க்க

அமித் ஷா வருகை: 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டையில் இன்றும்(மார்ச். 6) நாளையும்(மார்ச். 7) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கபட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கம்!

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:வனத்துறை அமைச்சரால் 100 மரகதப்பூஞ்சோலைகள் (கிராம மரப்பூங்காக்கள்)... மேலும் பார்க்க

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!

திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா வெகு வி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் 6ல் தமிழகம், புது... மேலும் பார்க்க

பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு முதல்வர், பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமரிசித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஏழை, எளி... மேலும் பார்க்க