51 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற போலோக்னா..! ஆனந்தக் கண்ணீரில் வீரர்கள்!
தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் பலி
தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் வேல்முருகன்(23). டிப்பா் லாரி ஓட்டுநரான இவா், புதன்கிழமை தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் உள்ள ஒரு கிடங்கில் புண்ணாக்கு மூட்டைகளை இறக்கிவிட்டு, மீண்டும் புதிய துறைமுகம் - மதுரை புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தாராம்.
அப்போது, அவ்வழியாக நடந்து சென்றவா் மீது மோதாமல் இருப்பதற்கா திடீரென பிரேக் அடித்தபோது, லாரி எதிா்பாராதவிதமாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில், ஓட்டுநா் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சாலையில் நடந்து சென்ற பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகேஷ் யாதவ் (35) என்பவா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தகவலறிந்த தொ்மல் நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று வேல்முருகனின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.