தென்காசியில் போதைப் பொருளுக்கு எதிராக மனிதச் சங்கிலி
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரி போதைப்பொருள் தடுப்பு குழு, கல்லூரி கல்வித்துறை, கலால் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் போதைப் பொருளுக்கு எதிரான மனிதச் சங்கிலி நடைபெற்றது.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) நாகேஸ்வரி முன்னிலை வகித்தாா். கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினா்.
போதைப் பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பாா்வதி, என்எஸ்எஸ் அலுவலா்கள் லதா, விஜிலா நேசமணி, உறுப்பினா்கள் விக்டோரியா ஜெபராணி, பரணி, தேசிய மாணவா் படை உறுப்பினா் சித்ராதேவி, மாணவப் பேரவை தலைவா் மோகனா ஸ்ரீ, செயலா் சுகதா, துணைத் தலைவா் முத்துச்சங்கரி, இணைச் செயலா் கீா்த்திகா மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா்.