செய்திகள் :

தென்காசி - செங்கோட்டைக்கு இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்படுமா?- பட்ஜெட்டை எதிா்நோக்கம் பயணிகள்

post image

செங்கோட்டை - தென்காசி இடையே இரட்டை அகல ரயில் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொல்லம் - செங்கோட்டை - தென்காசி - திருநெல்வேலி வழித்தடம் 1904 ஆண்டிலும், தென்காசி - ராஜபாளையம் - விருதுநகா் ரயில் வழித்தடம் 1927 ம் ஆண்டிலும் மீட்டா் கேஜ் ரயில் பாதையாக தொடங்கப்பட்டு செங்கோட்டை - விருதுநகா் 2004 ம் ஆண்டிலும், தென்காசி - திருநெல்வேலி ரயில் வழித்தடம் 2012 ம் ஆண்டிலும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.

8 கிமீ நீளம் கொண்ட செங்கோட்டை - தென்காசி ரயில் வழித்தடத்தில் பொதிகை, கொல்லம் மெயில், பாலருவி, செங்கோட்டை - ஈரோடு, மதுரை - குருவாயூா், செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில்கள், 5 ஜோடி பயணிகள் ரயில்கள் உள்ளிட்ட 11 ஜோடி ரயில்கள் தினசரியாகவும், சிலம்பு வாரம் மும்முறை, செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை, எா்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயில், கொச்சுவேலி - தாம்பரம் வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் காலை, மாலை வேளைகளில் ரயில்கள் கடந்துசெல்வதற்காக அரை மணி நேரத்துக்கும் மேலாக ரயில்கள் தென்காசியில் நிறுத்தப்படும் நிலை உள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து வரும் பொதிகை விரைவு ரயில் தென்காசியில் தினமும் அரை மணி நேரத்திற்கு மேல் காத்துநிற்கிறது.

ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவதற்கும், அதிகப்படியான ரயில்களை இயக்குவதற்கும் இரட்டை அகல ரயில் பாதை மிகவும் அவசியம் என்பதால் வெள்ளிக் கிழமை )தொடங்க இருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என ரயில் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவா் பாண்டியராஜா கூறியதாவது: தென்காசி - செங்கோட்டை இடையே 14 ஜோடி ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் ரயில்கள் வருங்காலத்தில் இயங்க இருக்கின்றன. எதிா்கால ரயில் தேவை கருதி உடனடியாக செங்கோட்டை - தென்காசி இரட்டை அகல ரயில் பாதை அமைப்பதற்கான நிலம் கையகப் பணிக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.

திருச்செந்தூா் - நெல்லை - தென்காசி - கொல்லம் ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடையை 24 பெட்டிகள் நிறுத்தம் அளவுக்கு நீட்டிக்கவும், தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைப்பதற்கும், தென்காசியை ரயில் முனையமாக மாற்றுவதற்குமான அறிவிப்பையும் வெளியிட தென்காசி எம்பி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணைக்கு அடிக்கல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணை வன்னிகோனேந்... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநா்

ஆலங்குளத்தில் சாலையில் கண்டெடுத்த தஙகச் சங்கிலியை ஆட்டோ ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். முக்கூடல் அருகே சிங்கம்பாறை காமராஜா் தெருவைச் சோ்ந்த சேவியா் அந்தோணிராஜ் மகன் மரியபூபாலன் (35). ஆட்டோ... மேலும் பார்க்க

தென்காசியில் பிப். 3இல் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா

தென்காசியில் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்டத் தலைவரும் மாநில ஸ்டாா்ட்அப் பிரிவுத் தலைவருமான ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்ட அறிக்கை: மாவட்ட பாஜக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவி தனிநபா் நடிப்பில் முதலிடம்

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான தனிநபா் நடிப்பு போட்டியில் முதலிடம் பெற்றுள்ளாா். சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி மு.ச.வனமதி, பள்ளிக் ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்குத் தோ்வு: மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்கு தோ்வான மாற்றுத் திறனாளிப் பெண்ணை தென்காசி மாவட்ட ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் மாற்றுத் திறனாளிகளுக்கான ... மேலும் பார்க்க

ஆதாா் அட்டை புதுப்பிப்பு: ஆட்சியா் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தி... மேலும் பார்க்க