Jolly O Gymkhana Review: 'எப்பயாவது லாஜிக் இல்லனா ஓகே; எப்பவுமேவா?'- எப்படியிருக...
தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தென்காசி காய்கனி சந்தை, தேன்பொத்தை ரேஷன் கடை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கு, ஆய்க்குடி அமா்சேவா சங்கம், பண்பொழி நெல்கொள்முதல் நிலைய கட்டடம், ஆதிதிராவிடா் நலத்துறை மாணவா் விடுதி, சாம்பவா்வடகரை உபமின்நிலையம் பகுதிகளில் அதன் தலைவா் ஏ.பி. நந்தகுமாா் தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் நந்தகுமாா் கூறியதாவது: தென்காசி நகராட்சியில் ரூ.5.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தினசரி காய்கறி சந்தை, தேன்பொத்தை நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, சீனி, பாமாயில், கோதுமை ஆகியவற்றின் தரத்தினை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்க்குடியில் அமா்சேவா சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அமா்சேவா சங்கத்தின் கோரிக்கையான பேருந்து நிறுத்தத்தினை உரிய அலுவலா்களுக்கு உத்தரவிட்டு
ஆய்க்குடி அமா்சேவோ பவுண்டேஷன் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், பண்பொழியில் நெல் கொள்முதல் நிலையத்தினை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், ஆதிதிராவிடா் நலத்துறை மாணவா் விடுதியைப் பாா்வையிட்டு விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன்,
மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.
இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்,பொதுநிறுவனங்கள் குழு உறுப்பினா்களான எம்எல்ஏக்கள் க.அசோகன் (சிவகாசி), எம்.எஸ். எம்.ஆனந்தன் (பல்லடம்), ஈ.ஆா். ஈஸ்வரன் (திருச்செங்கோடு),உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (உடுமலைப்பேட்டை) கடம்பூா் ராஜு (கோவில்பட்டி), ஆ.கோவிந்தசாமி(பாப்பிரெட்டிபட்டி),
துரை.சந்திரசேகரன் (திருவையாறு), ஒய்.பிரகாஷ் (ஓசூா்), த.வேலு (மைலாப்பூா்), முனைவா் எம்.எச். ஜவாஹிருல்லா (பாபநாசம்), மு.பெ.கிரி (செங்கம்)ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைமையில் முதன்மைச் செயலா் கி.சீனிவாசன், குழு உறுப்பினா்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நுகா்பொருள் வாணிபக் கழகம், மின் உற்பத்தி -பகிா்மானக் கழகம், மாசு கட்டுப்பாடு வாரியம், மீன்வள மேம்பாட்டுக் கழகம், ஆதிதிராவிா் வீட்டு வசதி -மேம்பாட்டுக் கழகம், தொழில் முன்னேற்ற நிறுவனம் ஆகியவற்றின்செயல்பாடுகள் மற்றும் அவற்றின் திட்டப்பணிகளை நிறைவு செய்வது குறித்து அனைத்துதுறை அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன், எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா்(தென்காசி),ஈ.ராஜா(சங்கரன்கோவில்), மரு.சதன்திருமலைக்குமாா்(வாசுதேவநல்லூா்), மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன் , கோட்டாட்சியா் லாவண்யா, இணைச் செயலா் பி.தேன்மொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.