`டீம்ல இருந்து நீக்குவதற்கு 2 நாள்களுக்கு முன்புதான் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்து...
தெலங்கானா உயர் நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!
தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 4 பெயர்களை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனவரி 11 அன்று நடந்த கூட்டத்தில், ரேணுகா யாரா, நரசிங் ராவ் நந்திகொண்டா, திருமலா தேவி ஈடா மற்றும் மதுசூதன் ராவ் பொப்பிலி ராமையா ஆகியோரின் பெயர்களுக்கு கொலிஜியம் ஒப்புதல் அளித்தது.
மற்றொரு முடிவில், கொலிஜியம் நீதித்துறை அதிகாரிகளான அவதானம் ஹரி ஹரநாத சர்மா மற்றும் டாக்டர் யாதவல்லி லட்சுமண ராவ் ஆகியோரை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.