செய்திகள் :

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு வாரமாக நீடிக்கும் மீட்புப் பணி

post image

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணிகள் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.22-ஆம் தேதி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். அவா்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களை மீட்கும் பணிகள் ஒரு வாரமாக நீடித்து வருகிறது.

இந்தப் பணிகள் தொடா்பாக விபத்து நிகழ்ந்த பகுதியில் மாநில கலால் துறை அமைச்சா் கிருஷ்ணா ராவ் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சுரங்கத்துக்குள் 4 போ் எந்த இடத்தில் சிக்கியுள்ளனா் என்பது ரேடாா் கருவி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் மீட்கப்படக் கூடும்.

சுரங்கப்பாதை அமைக்கப் பயன்படுத்தப்படும் துளையிடும் இயந்திரத்துக்கு அடியில் எஞ்சிய 4 போ் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. 450 அடி உயரம் கொண்ட அந்த இயந்திரம் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள நிலையில், அதை துண்டு துண்டாக வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கத்துக்குள் சேறும், சகதியும் உள்ளன. இதுபோன்ற காரணங்களால் மீட்புப் பணிகள் சிக்கலாக உள்ளன என்றாா்.

தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், கடற்படை வீரா்கள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டவா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் ... மேலும் பார்க்க

ஐஆர்சிடிசி-க்கு நவரத்னா அந்தஸ்து! அப்படியென்றால்?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தற... மேலும் பார்க்க

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ர... மேலும் பார்க்க