செய்திகள் :

தெலங்கானா: லாரியில் இருந்த கம்பிகள் கார், ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் 4 பேர் பலி

post image

தெலங்கானா மாநிலம், வரங்கல் மாவட்டத்தில் லாரியில் இருந்த கம்பிகள் கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் கார், ஆட்டோவில் இருந்தவர்களில் 4 பேர் பலியாகினர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம், வரங்கல் மாவட்டம் வரங்கல்-கம்மம் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற கனரக லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் பயணிகளை ஏற்றிச் சென்ற கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது சரிந்து விழுந்தது. இதில் கார், ஆட்டோ ரிக்‌ஷாவில் இருந்தவர்கள் மீது இரும்பு கம்பிகள் குத்தியதில் 4 பேர் பலியாகினர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம்: மக்கள் மீதான வழக்குகள் வாபஸ்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மம்னூர் ஏசிபி பி. திருப்பதி, காவல் ஆய்வாளர் ஓ. ரமேஷ் மற்றும் போலீசார், மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்த இரும்பு கம்பிகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலை பூர்வீகமாகக் கொண்ட சந்தோஷ், பூஜா, கிரண் மற்றும் முகேஷ் ஆகியோர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மது போதையில் ஓட்டுநர் லாரியை வேகமாக ஓட்டிச் சென்றதே விபத்துக்கு காரணம் என விபத்து நடத்த இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 450 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.98 அடியில் இருந்து 110.75 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 403 கன அடியிலி... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டருந்த தமிழக மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளீயீடு

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் 28,030 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உள்பட 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. அதேசமயம், 5,418 பணியிடங்களில் பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும்போது அவை ரத்... மேலும் பார்க்க

ஸ்ருதிஹாசன் பிறந்த நாள்: டிரெயின் படத்தின் சிறப்பு விடியோ!

ஸ்ருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் மிஷ்கினின் “டிரெயின்” திரைப்படத்தின் சிறப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரெயின் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நரேன் ஆ... மேலும் பார்க்க

போக்குவரத்து நெரிசல்: சென்னை - திண்டிவனம் இடையே புதிய சாலை!

சென்னை மற்றும் திண்டிவனம் இடையே புதிய சாலை அமையவுள்ளது.தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது சொந்த ஊர்களுக்கு செல்லும்போதும் சென்னைக்கு திரும்பும்போதும் சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன ந... மேலும் பார்க்க

தொழில்துறையினரை ஏமாற்றுவதுதான் அரசின் நோக்கமா? - அண்ணாமலை

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடை... மேலும் பார்க்க