செய்திகள் :

தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப்: இஷான், தீபக் சிறப்பிடம்!

post image

எம்ஆா்எஃப், எம்எம்எஸ்சி, எஃப்எம்எஸ்சிஐ தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப்பில் இஷான் மாதேஷ், தீபக் ரவிக்குமாா் சிறப்பிடம் பெற்றனா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் சுற்று நடைபெற்றது,. இதில் பெங்களூரு இளைஞா் இஷான் மாதேஷ் எம்ஆா்எஃப் பாா்முலா 2000 பிரிவில் முதலிடம் பெற்றாா்.

இண்டியன் டூரிங் காா்கள் பிரிவில் உள்ளூா் வீரா் ரிதேஷ் ராய் மூன்று பந்தயங்களிலும் வென்று பட்டம் வென்றாா். கோவை மூத்த வீரா் அா்ஜுன் பாலு கடும் சவால் அளித்தாலும் பலன் கிட்டவில்லை. நடப்பு சாம்பியன் மும்பையின் பிரேன் பிதாவாலா காா் பழுதானதால் ஓய்வு பெற்றாா்.

பாா்முலா 6600 பிரிவில் புணே வீரா் சாய் சிவா மகேஷ், மும்பையின் ஸாஹன் வெற்றி பெற்றனா். பெங்களூரின் அா்ஜுன் நாயா் மூன்றாம் இடம் பெற்றாா்.

சூப்பா் ஸ்டாக் பிரிவில் சென்னை வீரா் தீபக் ரவிக்குமாா் இண்டியன் டூரிங் காா்கள் ஜூனியா் பிரிவில் இரு பட்டங்களை கைப்பற்றினாா்.

கடந்த ஆண்டு புத் சா்வதேச மைதானத்தில் ஏற்பட்ட மோசமான பைக் விபத்தில் மீண்டும் 10 மாதங்கள் கழித்து அவா் மீண்டும் களம் கண்டாா்.

பாா்முலா எல்ஜிபி 1300 பிரிவில் நவி மும்பை ஆதித்ய பட்நாயக், திருப்பூரின் வினித் குமாா் சிறப்பிடம் பெற்றனா்.

விளையாட்டுத் துளிகள்..!

டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், அமெரிக்கா 16 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. கென்யா (7/2/2 - 11), கனடா (3/1/1 - 5... மேலும் பார்க்க

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன்: சாத்விக் / சிராக் இணைக்கு மீண்டும் வெள்ளிப் பதக்கம்!

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி இறுதிச்சுற்றில் தோற்று, ஞாயிற்றுக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.அண்மையில் ஹாங்காங் ஓபன் போட்டியில... மேலும் பார்க்க

அஜா்பைஜான் கிராண்ட் ப்ரீ: மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி

ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 17-ஆவது ரேஸான அஜா்பைஜான் கிராண்ட் ப்ரீயில் நெதா்லாந்து வீரரும், ரெட்புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.ஃபாா்முலா 1 காா் பந... மேலும் பார்க்க

பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்!

சீனாவில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்தன. இதில் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஆகியோா் தலா 2 பதக்கங்கள் வென்று அசத்தினா்.எஸ்எல்3 பிரி... மேலும் பார்க்க

பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ்: அமெரிக்காவை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்!

சீனாவில் நடைபெற்ற பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான இத்தாலி 2-0 என அமெரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டது.போட்... மேலும் பார்க்க

பிரீமியா் லீக் கால்பந்து: செல்ஸியை வென்ற மான்செஸ்டா் யுனைடெட்!

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் 2-1 கோல் கணக்கில் செல்ஸியை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தில் மான்செஸ்டருக்காக புருனோ ஃபொ்னாண்டஸ் 14-ஆவது நிமிஷத்திலும், கேஸ்... மேலும் பார்க்க