தேனி, வீரபாண்டி பகுதிகளில் நாளை மின் தடை
தேனி, வீரபாண்டி பகுதிகளில் புதன்கிழமை(நவ.13) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட அறிவிப்பு: தேனி, வீரபாண்டி துணை மின் நிலையங்களில் நவ.13-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூா், பூதிப்புரம், வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா்.