தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழப்பு
பல்லடம் அருகே உள்ள செல்லபிள்ளைபாளையத்தில் தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட செல்லபிள்ளைபாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னப்பன். இவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவரது மனைவி லட்சுமி (64). இவருக்கு குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்து தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில், வீட்டின் அருகே இருந்த தேனீக்கள் திடீரென இவரை புதன்கிழமை கொட்டின. இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.