செய்திகள் :

தேர்தல் விதிகளில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

post image

தேர்தல் விதிகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.

குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சிசிடிவி காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – ஹரியாணா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சிசிடிவி பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசானது இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதன்மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. மத்திய பாஜக அரசின் பயம் ஹரியாணா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது. 

இதையும் படிக்க | 'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதியா? மாநிலப் பட்டியலில் கல்வி வேண்டும்' - அன்பில் மகேஸ்

தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பாஜக தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பா? - அமைச்சர் விளக்கம்

முன்னதாக தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்றில், மனுதாரருக்கு தேவையான ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்பின்னர் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும், சிசிடிவி காட்சி, வேட்பாளர்களின் வீடியோ காட்சிகள் போன்ற சில மின்னணு ஆவணங்களை பொது ஆய்வுக்கு வழங்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தமிழ் வளா்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழ் வளா்ச்சிக்கென தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் உள்ள தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன்!

திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாளை (டிச. 24) ஆஜராக வலியுறுத்தி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விச... மேலும் பார்க்க

8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி முறையே தொடரும்: அமைச்சர்

கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது என்றும், தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் எனவும் பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு எதிரானது பாஜக: மு.க. ஸ்டாலின்

சிறுபான்மையினருக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 23) குற்றம் சாட்டியுள்ளார்.அதனால்தான் தேர்தலில் பாஜகவை சிறுபான்மை அரசாக்கியிருக்கிறார்கள் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்: அரசாணை

அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும், அயல்நாட்டு ... மேலும் பார்க்க

தூத்துக்குடி, குமரி செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற டிச. 29, 30, 31 ஆகிய 3 நாள்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டிச. 29 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு முதலில் தூத்துக்... மேலும் பார்க்க