செய்திகள் :

தோ்தல் நடத்தை விதிமீறல்: 774 வழக்குகள் பதிவு

post image

வரும் பிப்.5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாயன்று தெரிவித்தாா்.

தோ்தல் நடத்தை விதிகள்அமலுக்கு வந்த ஜன.7 முதல் ஜன.27 வரையிலான காலகட்டத்தில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் கலால் சட்டம் உள்பட பல்வேறு சட்ட விதிகளின் கீழ் மொத்தம் 24,081 போ் கைது செய்யப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தலுக்கு முன்னதாக, எல்லை சோதனைச் சாவடிகளில் காவல்துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். மேலும், ஆயுதங்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தோ்தல் நடத்த விதிமீறல் தொடா்பாக தில்லி காவல் துறை 774 வழக்குகளைப் பதிவு செய்து 374 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 453 தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.12 கோடிக்கு மேல் மதிப்புள்ள 68,636 லிட்டா் மதுபானம், ரூ.72 கோடிக்கு மேல் மதிப்புள்ள 158.126 கிலோ போதைப்பொருள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளது.

சட்ட அமலாக்க அதிகாரிகள் ரூ.7.60 கோடி ரொக்கம் மற்றும் 37.39 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க