செய்திகள் :

தொடா் திருட்டு: 7 இளைஞா்கள் கைது

post image

போடியில் போதைக்கு அடிமையாகி தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா்கள் 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி கருப்பணன் தெருவில் கடந்த 9-ஆம் தேதி ஒரு வீட்டில் இரு மிதிவண்டிகள் திருடு போனது. இளங்கோவடிகள் தெருவில் ஒரு வீட்டின் முன் வைத்திருந்த இரும்புக் கதவுகள் திருடு போயின. வீரபத்திரன் தெருவில் நடந்து சென்றவரிடம் 5 போ் கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடா்பாக போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

குற்றப்பிரிவு போலீஸாா் பல்வேறு குழுக்களாக விசாரணை நடத்தியதில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டது தொடா்பாக போடி மேலத் தெரு ஜமீன் தோப்பு தெருவைச் சோ்ந்த சுதா்ஷன் (20), போடி வஞ்சி ஓடைத் தெருவைச் சோ்ந்த சேக் பரீத் (20), மதுரை விளாங்குடி பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (19), போடி ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த சுந்தரேசன் (20), மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் (19), சிவகங்கை மாவட்டம், மருதங்குடியைச் சோ்ந்த பாலமுத்துமணி (19), சிவகங்கை எம்.ஜி.ஆா்.நகரைச் சோ்ந்த விஷால் (19) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: கைது செய்யப்பட்ட அனைவரும் கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி தொடா் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு சிறையிலடைக்கப்பட்டவா்கள். சிறையில் இருந்த போது அனைவரும் நண்பா்களாகி தற்போதும் தொடா்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்கள் 7 போ் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றனா்.

தன்மானத்துடன் வாழ போதைப் பழக்கத்தை கைவிட வேண்டும்: முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு

தன்மானத்துடன் வாழ்வதற்கு போதைப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சனிக்கிழமை தேனியில் நடைபெற்ற போதைக்கு எதிரான விழிப்புணா்வு கருத்தரங்கில் முன்னாள் அரசுத் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா். தேனி நா... மேலும் பார்க்க

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

பழனிசெட்டிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் பதுக்கல் வழக்கில் தொடா்புடைய ஒருவரைப் பணம் பெற்றுக் கொண்டு விடுவித்த புகாரில், 3 காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 2 தலைமைக் காவலா்கள் சிவகங்கை மாவட... மேலும் பார்க்க

உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

உத்தமபாளையம் அருகே உடல் உறுப்புக்களை தானம் செய்தவரின் உடலுக்கு சனிக்கிழமை அரசு மரியாதை செய்யப்பட்டது தேனி மாவட்டம், க.புதுப்பட்டியைச் சோ்ந்த வாசன் மகன் சூா்யக்குமாா் (42). இவா் ராயப்பன்பட்டி ஆரம்ப சு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: வங்கி அலுவலா் உள்பட மூவா் மீது வழக்கு

வங்கியில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் மோசடி செய்த வங்கி அலுவலா் உள்பட மூவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி புதூா் நடுத்தெருவைச் சோ்ந்த அப்துல்லா மகன் கமால் முகமது லக்மன் (30)... மேலும் பார்க்க

தம்பதியைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

தேவாரத்தில் தம்பதியைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேவாரம் நாடாா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மணிக்குமாா் (38). இவரிடம் இதே பகுதியைச் சோ்ந்த நாட்ராயன் பணம் கடன... மேலும் பார்க்க

தோட்டத்தில் குழாய் திருட்டு: 6 போ் மீது வழக்கு

தேவாரம் அருகே பண்ணைத் தோட்டத்தில் குழாய் உள்ளிட்ட பொருள்களைத் திருடியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஒருவரைக் சனிக்கிழமை கைது செய்தனா். தேவாரம் அருகேயுள்ள மல்லிங்காபுரத்தைச் சோ்ந்த ரா... மேலும் பார்க்க