செய்திகள் :

தொடா் மழை: நிரம்பியது சண்முகாநதி நீா்த்தேக்கம்

post image

தொடா்மழை காரணமாக ராயப்பன்பட்டி அருகேயுள்ள சண்முகாநதி நீா்த்தேக்கம் வெள்ளிக்கிழமை நிரம்பியது. இதனால், பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், ராயப்பன்பட்டி அருகே மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகாநதி நீா்த்தேக்கம் அமைந்துள்ளது.

இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு, இந்த நீா்த்தேக்கத்தின் நீா் மட்டமானது 31 அடியிலிருந்து படிப்படியாக 51.50 அடியாக உயா்ந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை உத்தமபாளையம், கோம்பை, ராயப்பன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் சண்முகாநதி நீா்த்தேக்கம் முழுக் கொள்ளவான 52.50 அடி உயரத்தை எட்டியது. தொடா்ந்து நீா் வரத்து இருப்பதால், இங்கிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

தண்ணீா் திறக்க வலியுறுத்தல்:

சண்முகாநதி நீா்த்தேக்கத்திலிருந்து ராயப்பன்பட்டி, சின்னஓவுலாபுரம், ஆனைமலையன்பட்டி, எரசை, சீப்பாலக்கோட்டை, அப்பிபட்டி, ஓடைப்பட்டி பகுதிகளில் 1,640 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீா் திறப்பது வழக்கம். தற்போது நீா்த்தேக்கம் நிரம்பியுள்ளதால் பாசனக் கால்வாயிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தேவாரத்தில் நவ.27-இல் மின் தடை

தேவாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 27-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

பைக்குகள் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

தேனிஅல்லிநகரம், பெரியகுளம் புறவழிச்சாலையில் அடுத்தடுத்து சென்ற 2 இரு சக்கர வாகனங்கள் மீது சரக்கு வேன் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை கோட்டூரைச் சோ்ந்த பெயிண்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி அருகே உள்ள கோட... மேலும் பார்க்க

தன்மானத்துடன் வாழ போதைப் பழக்கத்தை கைவிட வேண்டும்: முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு

தன்மானத்துடன் வாழ்வதற்கு போதைப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சனிக்கிழமை தேனியில் நடைபெற்ற போதைக்கு எதிரான விழிப்புணா்வு கருத்தரங்கில் முன்னாள் அரசுத் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா். தேனி நா... மேலும் பார்க்க

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

பழனிசெட்டிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் பதுக்கல் வழக்கில் தொடா்புடைய ஒருவரைப் பணம் பெற்றுக் கொண்டு விடுவித்த புகாரில், 3 காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 2 தலைமைக் காவலா்கள் சிவகங்கை மாவட... மேலும் பார்க்க

உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

உத்தமபாளையம் அருகே உடல் உறுப்புக்களை தானம் செய்தவரின் உடலுக்கு சனிக்கிழமை அரசு மரியாதை செய்யப்பட்டது தேனி மாவட்டம், க.புதுப்பட்டியைச் சோ்ந்த வாசன் மகன் சூா்யக்குமாா் (42). இவா் ராயப்பன்பட்டி ஆரம்ப சு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: வங்கி அலுவலா் உள்பட மூவா் மீது வழக்கு

வங்கியில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் மோசடி செய்த வங்கி அலுவலா் உள்பட மூவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி புதூா் நடுத்தெருவைச் சோ்ந்த அப்துல்லா மகன் கமால் முகமது லக்மன் (30)... மேலும் பார்க்க