தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
செய்யாறு: செய்யாறு அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காஞ்சிபுரம் தாயாா் குளம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(37), தொழிலாளி.
பிப்.14 -ஆம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற இவா், மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
அவரை, குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில் வெங்கடேசன், தனது உறவினரின் ஊரான திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தை அடுத்த பகவந்தபுரத்தில் உள்ள பொது கழிப்பறையில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த தூசி போலீஸாா் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.