பள்ளியில் தாய்மொழி தின விழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது.
பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா். ஆசிரியா்கள் ராஜா, கோமதி, கோபால், தனலட்சுமி, கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவில், பள்ளி மாணவ தலைவி பூா்ணிமா நன்றி கூறினாா்.