செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!
தொழில் அனுமதிக்கான காலக்கெடு நிா்ணயம்
புதுவையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள இந்த சட்ட முன்வரைவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் அறிமுகப்படுத்தினாா். இந்த சட்டமுன்வரைவின் சிறப்பு அம்சங்கள்:
இச் சட்டத்தின்படி புதுவை அரசின் தொழில், மின்சாரம், உள்ளாட்சி, சுற்றுச்சூழல், வருவாய், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தடையில்லா ஆணை வழங்க 5 முதல் அதிகபட்சமாக 71 நாள்கள் வரை காலவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை மீறினால் சட்டப் பிரிவு 8 (1)ன்படி அபராதம் விதிக்கவும் மசோதா வழிவகை செய்துள்ளது.