இந்தியா-இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: வை...
நக்சல்களைக் கொல்வதில் மகிழ்ச்சியில்லை: அமித்ஷா
நக்சல்கள் கொல்லப்படுவதில் யாரும் மகிழ்ச்சியடைவதில்லை. பழங்குடியின மக்களின் வளர்ச்சியை அவர்கள் தடுக்கமுடியாது. என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
சத்தீஸ்கரில் பஸ்தார் பகுதியில் அம்மாநில அரசு நடத்திய ‘பஸ்தார் பண்டம்’ எனப்படும் விழா நடைபெற்றது. இதன் நிறைவு விழாவான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
அங்கு பேசிய அவர், “பஸ்தாரில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளின் காலம் முடிந்துவிட்டது. நக்சல் சகோதரர்கள் ஆயுதங்களை கைவிட்டு பொது நீரோட்டத்தில் கலந்துவிடுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் எங்களில் ஒருவரே. நக்சல்கள் கொல்லப்படுவதில் யாரும் மகிழ்ச்சியடைவதில்லை.
நீங்கள் பழங்குடியின மக்களின் வளர்ச்சியை ஆயுதங்களின்மூலம் தடுக்கமுடியாது.
இந்தப் பிரதேசத்திற்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பஸ்தார் பகுதிக்கு அனைத்தையும் வழங்கியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் பஸ்தார் பெரிய வளர்ச்சியைப் பெறவில்லை. நமது குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும்போது மட்டுமே இது நடக்கும். தாலுகாக்களில் சுகாதார வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, மருத்துவக் காப்பீடு போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
பஸ்தார் மக்கள் தங்கள் வீடுகளையும் கிராமங்களையும் நக்சல் இல்லாததாக இடங்களாக மாற்றினால் மட்டுமே உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும்.
கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 521 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். 2024-ல் 884 பேர் சரணடைந்தனர். வளர்ச்சிக்கு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் தேவையில்லை. கணினி, பேனாக்கள் மட்டுமே தேவை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்” என்று அவர் பேசினார்.
நக்சல்களை சரணடைய உதவிசெய்து, நக்சல் இல்லா பகுதியாக அறிவிக்கும் கிராமங்களுக்கு ரூ. 1 கோடி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் மற்றும் துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளனர்.