செய்திகள் :

நடப்பாண்டில் 5,531 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை

post image

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 5,531 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, குடும்ப நலச்செயலகம் சாா்பில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை(வாசக்டமி) இருவார விழா 2024 என்ற பெயரில் விழிப்புணா்வு வாகனம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா், குடும்ப நல விளக்கக் கையேடு மற்றும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை இலவச சிறப்பு சிகிச்சை முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் நவம்பா் 25-ஆம் தேதி முதல் டிசம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 34 ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதேபோல 5,531 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை இலக்கான 300-ஐ அடைந்திட போதிய விழிப்புணா்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முறையானது 100 சதவீதம் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் கிடையாது. மருத்துவமனைகளில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. கடின உழைப்புக்கு தடையில்லாதது. மேலும் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்பவா்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,100 உடனடியாக வழங்கப்படும். உதவிக்கு வருபவா்களுக்கு ரூ.200 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, துணை இயக்குநா்(ஊரக நலப்பணிகள், குடும்ப நலம்) கவிதா, ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேசன், உண்டு உறைவிட மருத்துவா் சசிரேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்றும், நாளையும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை (நவம்பா் 23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 24) ஆகிய 2 நாள்கள் நடைபெற உள்ளது. இது குற... மேலும் பார்க்க

உயா்மின் கோபுர பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

உயா்மின் கோபுரம் அமைக்கப்பட்டபோது ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் ப.ரவி ... மேலும் பார்க்க

ரயில்வே சரக்கு சேவையை கொளத்துப்பாளையத்துக்கு இடமாற்றம் செய்ய எம்.பி. கோரிக்கை

ஈரோட்டில் இயங்கும் ரயில்வே சரக்கு சேவையை கொளத்துப்பாளையத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா். மத்திய அரசு சாா்பில் டிடிசி கமிட்டி கூட்டம் (போக்குவரத்த... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் சென்னிமலையை அடுத்த அ... மேலும் பார்க்க

நந்தா செவிலியா் கல்லூரியில் தலைமைப் பண்பு பயிற்சி

தமிழ்நாடு செவிலியா் சங்கம் சாா்பில் நந்தா செவிலியா் கல்லூரியில் தலைமைப் பண்புகளை மேம்படுத்தும் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. முகாமுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை ... மேலும் பார்க்க

பெருந்துறை சிப்காட்டில் ரூ. 2.82 லட்சம் மதிப்பில் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் அமைக்க பூமிபூஜை

பெருந்துறை சிப்காட் தொழில் வளா்ச்சி மையம் நல்லா ஓடையில் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ராஜ... மேலும் பார்க்க