முகத்தை துடைத்தேன்; அதை வைத்து அரசியல் செய்கின்றனர்: இபிஎஸ் விளக்கம்
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.
தற்போது, சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் படப்பிடிப்பு ஒன்றில் ரோபோ சங்கர் பங்கேற்று வரும் நிலையில், புதன்கிழமை காலை படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயக்கமடைந்தார்.
உடனடியாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டார். படப்பிடிப்பின் போது நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர்.
தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து ரோபோ சங்கரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.