செய்திகள் :

'நடிப்புக் கலையின் பாடப்புத்தகம்' - லால் சலாம் பாராட்டு விழாவில் மோகன்லாலை புகழ்ந்த பினராயி விஜயன்!

post image

தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற நடிகர் மோகன்லாலுக்கு கேரள அரசு சார்பில் பாராட்டுவிழா திருவனந்தபுரம் செண்ட்ரல் ஸ்டேடியத்தில் லால் சலாம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை வகித்தார். இதில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "மலையாளத்தின் மகா நடிகர் மோகன்லால். கடந்த மாதம் 23-ம் தேதி ஜனாதிபதியிடமிருந்து தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ளார். மோகன்லாலுக்கு கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கு கிடைத்த அங்கீகாரமாகும். இது ஒவ்வொரு மலையாளிக்கும் பெருமை சேர்ப்பதாகும். மலையாள சினிமாவுக்கு விரைவில் நூறு ஆண்டு ஆகப்போகிறது. அதில் 50 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் மோகன்லால் நிறைந்து நிற்கிறார். தினசரி வாழ்க்கையில் பலருக்கும் மோகன்லாலின் காதபாத்திரம் வந்துசெல்வது வழக்கமாகும்.

தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற நடிகர் மோகன்லாலுக்கு கேரள அரசு சார்பில் நடந்த பாராட்டுவிழா

லாலேட்டன் என அழைப்பதன் மூலம் தங்கள் வீட்டில் ஒருவரைப்போல, பக்கத்துவீட்டு சகோதரனைப்போல மோகன்லாலை கேரள மக்கள் பார்க்கிறார்கள். 65-வது வயதிலும் அவரது நடிப்பு தொடருகிறது. 1986-ம் ஆண்டில் மட்டும் 34 சினிமாக்களில் நடித்துள்ளார். ஓரு வருடத்தில் இரண்டு மூன்று சினிமாக்களில் நடிப்பதே புதிய தலைமுறை நடிகர்களுக்கு அபூர்வமான ஒன்று. ஒரே ஆண்டில் 34 சினிமாக்களில் நடித்த மோகன்லாலை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம். நடுத்தர மக்களின் வாழ்க்கை பிரச்னைகளை கூறும் பல சினிமாக்களில் மோகன்லால் நடித்துள்ளார். நடிப்புக் கலையின் பாடப்புத்தகம் என அவரை புகழ்கிறார்கள். கேரளா எல்லையை கடந்து தமிழ், ஹிந்தி, என பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் மோகன்லாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஏற்புரையில் மோகன்லால் பேசுகையில், "டெல்லியில் வைத்து தாதா சாகேப் பால்கே விதுதுபெற்றதைவிட அதிக உணர்ச்சிப்புர்வமாக திருவனந்தபுரத்தில் உங்கள் முன் நிற்கிறேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. நான் பிறந்து வளர்ந்து, வாலிபத்தையும், இளமைக் காலத்தை கழித்த மண் இது. என் அப்பா, அம்மா, சகோதரர் ஆகியோருடன் வாழ்க்கையின் பிரச்னைகளை தெரியாமல் நான் வாழ்ந்த மண். இங்குள்ள காற்று, மரங்கள், சாலைகள், பழைய பல கட்டடங்களும் என் நினைவுகளுடன் ஆத்மாவின் அங்கமாகும்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நடிகர் மோகன்லால்

என்னை நானாக மாற்றிய கேரளாவும், மலையாள மக்களும், அவர்கள் தேர்ந்தெடுத்த அரசும் எனக்கு பாராட்டுவிழா நடத்துகிறது. அதற்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்கையிலும், கேரியரிலும் ஏற்றத்தையும், இறக்கத்தையும் பார்த்திருக்கிறேன். வானளாவிய புகழ்ச்சியும், பாதாளத்தைப்போன்ற பழிச்சொற்களும், விமர்சனங்களையும் நான் அனுபவித்திருக்கிறேன். இரண்டையும் நான் சமமாகத்தான் பார்க்கிறேன். நான் பெற்ற அனைத்து விருதுகளையும் கேரளாவுக்கும், கேரள மக்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன்" என்றார்.

ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம் - ராஜேஷ் குமார்

தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் வாக்குத் திருட்டைக் கண்டித்து கையெழுத்து பிரசார ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் சுற்றுப்பயணம் 3-வது முறையாக தேதி மாற்றம்; காரணம் இதுதான்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 120 சட்டமன்ற தொகுதிகளைக் கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று வரு... மேலும் பார்க்க

ஆரோவில்: `காவு கொடுக்கப்படும் விவசாயப் பண்ணை!’ - அம்பலமான சென்னை ஐஐடி ஒப்பந்தம்

வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்இந்த நிலையில்தான், ஆரோவில்லில் `பசுமைத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்’ அமைக்க, ஆரோவில் அறக்கட்டளைத் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி மற்றும் செயலாளர் ஜெயந்தி ... மேலும் பார்க்க

"சபரிமலை ஐயப்பன் சிலையை திருடாமல் விட்டதற்கு அரசுக்கு நன்றி"- காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கிண்டல்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தங்கம் பூசப்பட்ட கவசங்கள் பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் ஏழாம் தேதி சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து கேரளா ஐகோர்ட் ... மேலும் பார்க்க

`எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' - என்ன சொல்கிறார் சீமான்?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் மீன்பிடிக்கும... மேலும் பார்க்க

கோவை: காயத்துடன் 3 நாள்களாக ஆற்றில் நிற்கும் யானை - சிகிச்சை அளிக்க வனத்துறை தீவிரம்

கோவை மாவட்டம், ஆனைகட்டி பகுதியில், உடலில் காயங்களுடன் ஒரு மக்னா யானை கடந்த ஒரு வாரமாக சுற்றி கொண்டிருக்கிறது. அந்த யானை கேரளா வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தமிழக வனப்பகுதியான கூடப்பட்டி என்கிற கிராம... மேலும் பார்க்க