செய்திகள் :

நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 வீரர்கள் படுகாயம்!

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

பலிவா பகுதியில் மனோஹர்பூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட சரந்தா வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் 197 வது பிரிவினர் நக்சல்களுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நிறுவப்பட்டிருந்த ஐ.ஈ.டி. எனும் நவீன வெடிகுண்டு வெடித்ததில் 3 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் விமானம் மூலம் மீட்கப்பட்டு ராஞ்சியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: விரைவில் மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!

இந்நிலையில், ராஞ்சியில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்களை சந்தித்து நலம் விசாரித்த ஜார்க்கண்ட் காவல் உயர் அதிகாரி அனுராக் குப்தா கூறிகையில், இந்த குண்டு வெடிப்பில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த ரேடியோ ஆபிரேட்டர் ஒருவரின் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளதாகவும் தேவைப்பட்டால் அவரை தில்லிக்கு விமானம் மூலம் அழைத்து சென்று சிகிச்சையளிக்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக அம்மாநிலத்திலுள்ள மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் குறைந்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் பல நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும் மீதமுள்ளவர்களை விரைவில் அழிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

51 புதிய வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்!

தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.58 கோடி மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர... மேலும் பார்க்க

பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாயம்!

தென் கொரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். வட கொரியா நாட்டுடனான எல்லையில் போசியோன் நகரத்தின் அரு... மேலும் பார்க்க

6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு

சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி ... மேலும் பார்க்க

கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல்வர்!

சென்னை: 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்க... மேலும் பார்க்க

சிறையிலிருந்து விடுதலையான குற்றவாளி வெட்டிக் கொலை!

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் சிறையிலிருந்து வெளியான பதிவு குற்றவாளி பட்டபகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சம் மாவட்டத்தின் துலசிப்பூர் பஞ்சாயத்து தலைவரான மினாத்தி தாஸ் என்பவரின் கணவர் ரபிந்... மேலும் பார்க்க

கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்றுவதற்காக அதிமுக இரட்டை வேடம் போடுகிறது எனவும் உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர... மேலும் பார்க்க