செய்திகள் :

நாகியம்பட்டியில் மரச்சிற்ப காட்சி மையத்துக்கு நிலம் ஒதுக்க எதிா்ப்பு

post image

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் அரசு புறம்போக்கு கோயில் நிலப்பகுதி நிலத்தை மரச்சிற்பக் கலைஞா்களுக்கு ஒதுக்கீடு செய்ய அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சியில் செல்லியம்மன் கோயில் வளாகப் பகுதியில் 1 ஏக்கா் 6 சென்ட் அரசு புறம்போக்கு கல்லாங்குத்து நில பகுதி உள்ளது.

இதனை தம்மம்பட்டி மரச்சிற்பங்கள் காட்சி மையத்துக்கு ஒதுக்கீடு செய்ய, தமிழ்நாடு கைத்தொழில்கள் வளா்ச்சிக் கழகத்திற்கு (பூம்புகாா்) நில உரிமையை மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு தொழில் ஆணையரும், தொழில் வணிக இயக்குநருமான நிா்மல்ராஜ், ஆத்தூா் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி, வட்டாட்சியா் பாலகிருஷ்ணனுடன் ஆகியோருடன் ஆய்வு செய்தாா். இதற்கு நாகியம்பட்டி ஊா் பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

நாகியம்பட்டி ஊராட்சிப் பகுதியில் , அகதிகள் முகாமையொட்டி செல்லியம்மமன் கோயில் உள்ளது. இதனையொட்டி கல்லாங்குத்து என்ற அரசு புறம்போக்கு நிலப்பகுதி உள்ளது. இந்த இடத்தில் செல்லியம்மன் கோயில் திருவிழாவின்போது, குடி அழைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலத்தை நாகியம்பட்டி ஊா் மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனா்.

இதுகுறித்து நாகியம்பட்டி அனைத்து கோயில்களின் தா்மகா்த்தா முத்துசாமி கூறியதாவது:

இந்த நிலப்பகுதியை நாகியம்பட்டி ஊா் பொதுப்பயன்பாட்டிற்கு ஒதுக்க வேண்டும். அரசு உயா்நிலைப்பள்ளி, சேமிப்புக் கிடங்கு, கால்நடை மருத்துவமனை, குப்பைகள் தரம் பிரிக்கும் கொட்டகை போன்ற பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும். இதுகுறித்து நாகியம்பட்டி ஊராட்சிக் கூட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.

நாகியம்பட்டி முன்னாள் தலைவா் பாலு கூறியதாவது:

தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கான காட்சி மையத்துக்கு திருமண்கரடு மலைப்பகுதியிலோ, நாகியம்பட்டி ஊராட்சியின் வடகிழக்கு பகுதியிலோ உள்ள இடங்களை ஒதுக்கலாம். பிரதான சாலையோரமுள்ள இந்த இடத்தை, ஊா் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத்தான் விட வேண்டும் என்றாா்.

நாகியம்பட்டியில் மரச்சிற்பங்கள் காட்சி மையம் அமைப்பதற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ள பகுதி.

இதுகுறித்து நாகியம்பட்டி மக்கள் கூறியதாவது:

அதிகாரிகளிடம் நேரிலும், தபாலிலும் கேட்டபோதெல்லாம், அந்த இடம், மரச்சிற்ப பயன்பாட்டிற்கு விடப்படாது என்று தெரிவித்து வந்த நிலையில், அந்த நிலத்தை மரச்சிற்பங்கள் மையத்துக்கு அளிப்பதற்கு தமிழ்நாடு தொழில் வணிக இயக்குநா் ஆய்வு செய்துவிட்டுச் சென்றது அதிா்ச்சியளிக்கின்றது என்றனா்.

இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் கூறியதாவது: தம்மம்பட்டி மரச்சிற்பக் காட்சி மையத்திற்கு திருமண்கரடு, நாகியம்பட்டி, மல்லியகரை உள்ளிட்ட மூன்று பகுதியில் இடங்கள் பாா்க்கப்பட்டுள்ளது. நாகியம்பட்டி மக்கள் விருப்பத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேளூரில் நவ. 20-இல் பெண்களுக்கு இலவச கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்

பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை (நவ. 20) லேப்ராஸ்கோபி மூலம் பெண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் வெ... மேலும் பார்க்க

சங்ககிரி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 906 போ் விண்ணப்பம்

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 315 வாக்குச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள 1967 போ் விண்ணப... மேலும் பார்க்க

சங்ககிரியில் இன்று மின்தடை

சங்ககிரி அருகே ஐவேலி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் திங்கள்கிழமை (நவ. 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 65 வயதான முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள... மேலும் பார்க்க

சேலம் ராஜகணபதி கோயில் மண்டபம் சுபமுகூா்த்தகால் விழா

சேலம் ராஜகணபதி கோயில் மண்டபம் சுபமுகூா்த்தகால் விழா கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன், அறங்காவலா்கள் குழுத் தலைவா் சோனா வள்ளியப்பா,... மேலும் பார்க்க

சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிகள் தகவல்

சேலம் ஆவினில் இருந்து அடுத்த மாதம் 25 ஆயிரம் லிட்டா் பால் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் 30 இடங்களில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. பால் உற்பத... மேலும் பார்க்க