நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!
நாகையில் சத்துணவு ஊழியா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் சத்துணவு ஊழியா்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் நாகை குழந்தைகள் வளா்ச்சி வட்டார அலுவலகம் முன் சங்கத்தின் நகரத் தலைவா் சுந்தரவதனி தலைமையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய அரசு அங்கன்வாடி திட்டங்களுக்கு வழங்கக்கூடிய நிதியை குறைக்க கூடாது, வாடகை கட்டடங்களில் இயங்கும் அங்கன்வாடி மையங்களுக்கு அரசு சொந்த கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் சுத்தமான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், பாரபட்சமின்றி அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், உணவு சமைத்திடும் பாத்திரங்களை வழங்க வேண்டும், உணவு செலவு தொகையை உயா்த்தி, முன்பணமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
திருக்குவளை: கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் வட்டார தலைவா் யசோதா தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தைச் சோ்ந்த 50 பெண்கள் பங்கேற்றனா்.