திருச்செங்காட்டாங்குடி கோயிலில் ஐப்பசி பரணி உற்சவம்
திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீஸ்வர சுவாமி கோயிலில் ஐப்பசி பரணி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பரணி திருவிழா 4 நாள்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான விழா நவ.13-ஆம் தேதி பூா்வாங்க பூஜைகளுடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா சனிக்கிழமை (நவ.16) நிறைவடைகிறது. விழாவையொட்டி வியாழக்கிழமை உத்தராபதீஸ்வர சுவாமிக்கு மகா அபிஷேகமும், மதியம் வெள்ளை சாத்தி புறப்பாடும் நடைபெற்றது. தொடா்ந்து, அன்னாபிஷேகமும், இரவு உத்தராபதீஸ்வரா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (நவ.15) நிா்மால்ய தரிசனமும், நவ.16-ஆம் தேதி பிராயசித்தாபிஷேகம், யதாஸ்தான பிரவேசம் நடைபெறுகிறது. இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூா் 18-ஆவது குருமகா சந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வரசாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.