நாகை மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நாகை மாவட்டத்திற்கு நாளை(நவ. 26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக நேற்று வலுப்பெற்றது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கள்கிழமை (நவ.25) காலை தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் காற்றழுதத தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இதையும் படிக்க: அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: பாலச்சந்திரன்
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மழைக்கான சிவப்பு எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்திற்கு நாளை(நவ. 26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.