செய்திகள் :

'நாங்கள் எதிரிகள் அல்ல' - மகனுடன் சென்று பட்னாவிஸை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே

post image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பா.ஜ.க தலைமையில் புதிய கூட்டணி அரசு பதவியேற்று இருக்கிறது. புதிய அரசு பதவியேற்பு விழாவிற்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் உத்தவ் தாக்கரே அதில் கலந்து கொள்ளவில்லை. மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்ட நிலையில் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாக்பூரில் திங்கள் கிழமை தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக உத்தவ் தாக்கரே நாக்பூர் வந்திருந்தார். அவர் சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 15 நிமிடம் நீடித்தது.

மரியாதை நிமித்தமாக இச்சந்திப்பு நடந்தது. இதில் உத்தவ் தாக்கரேயுடன் அவரது மகன் ஆதித்ய தாக்கரே, அனில் பரப், வருண் சர்தேசாய் போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். இச்சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, "அரசு மகாராஷ்டிரா மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கவேண்டும்''என்றார்.

சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெற்ற வெற்றி குறித்து கேள்வி எழுப்பியது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,'' நாங்கள் மக்கள் மனதில் இருக்கும் சந்தேகத்தை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருப்போம்''என்றார்.

இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆதித்ய தாக்கரே, "எங்களுக்குள் அரசியல் மற்றும் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக நாங்கள் எதிரிகள் கிடையாது''என்றார். உத்தவ் தாக்கரே தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேவேந்திர பட்னாவிஸ் தான் சிவசேனாவை இரண்டாக உடைத்ததாக உத்தவ் தாக்கரே கருதுகிறார். அப்படிப்பட்ட நிலையிலும் இச்சந்திப்பு நடந்திருக்கிறது.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற 288 தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சி 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தங்களது கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஒன் பை டூ

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க“அபத்தமாகப் பேசியிருக்கிறார் பவன். மணிப்பூர் குறித்துப் பேச காங்கிரஸுக்குத் துளியளவும் அருகதை இல்லை. ஏனெனில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் வெளிநாட்டு... மேலும் பார்க்க

அல் உம்மா இயக்க தலைவர் பாஷா மரணம்; நேரில் சென்ற சீமான்... கொந்தளிக்கும் பாஜக

1998 கோவை குண்டு வெடிப்பு சம்பத்தின் முக்கிய குற்றவாளியான பாஷா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்காக 30 ஆண்டுகளுக்கு மேல் பாஷா சிறையில் இருந்தார்.கோவை குண்டு... மேலும் பார்க்க

Annamalai: "கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்கா தமிழ்நாடு" - அண்ணாமலை காட்டம்

தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கேரளாவிலிருந்து குப்பைகள் கொண்டுவது கொட்டப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு முதல் இது தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பல இடங்களில் குற்றச்சாட்... மேலும் பார்க்க

``தமிழக எல்லை மருத்துவக் கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்கா..?" - டிடிவி தினகரன் காட்டம்

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அமுமுக-வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க