செய்திகள் :

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

post image

அதானி விவகாரம், மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும்(நவ. 28) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை(நவ. 25) தொடங்கியது. இதில் சர்ச்சைக்குரிய வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட 15 மசோதாக்கள் குறித்து விவாதிக்க அல்லது நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க | ஸ்டாப்! ஸ்டாப்! பிரியங்காவை நிறுத்தி புகைப்படம் எடுத்த ராகுல்!!

கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்தன. கடந்த 3 நாள்களாக இரு அவைகளும் முடங்கிய நிலையில் இன்றும் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

முதலில் மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதையும் படிக்க | வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

அதேபோல, ஒத்திவைப்புக்குப் பிறகு நண்பகல் 12 மணிக்குத் தொடங்கிய மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாளை(நவ. 29) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நான்காவது நாளாக இரு அவைகளும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம்!

ஏற்கனவே இருக்கும் நிரந்தர கணக்கு எண் அட்டையை மாற்றிவிட்டு, மேம்படுத்தப்பட்ட பான் அட்டையை வழங்கும் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு ஒரு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.வரி செலுத்துவோருக்கும், பான... மேலும் பார்க்க

1993ல் கடத்தப்பட்ட சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் சேர்ந்ததன் பின்னணி?

நொய்டா: சிலர் விதிவசத்தால், தாங்கள் வாழ வேண்டிய நல்வாழ்வை தவறவிட்டு சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாவார்கள், அதுபோலவே நொய்டாவில் 1993ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டின் முதல்வரானார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். 49 வயதாகும் சோரன் முதல்வராக பதவியேற்பது இது நான்காவது முறையாகும். 81 உறுப்பினர்கள... மேலும் பார்க்க

தில்லி மின்சார வாகனக் கொள்கை: மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு!

தில்லி மின்சாரக் கொள்கையை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மாநில முதல்வர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிஷி கூறுகையில், தலைநகரில் நிகழ்... மேலும் பார்க்க

தோல்வியடைந்தால் அழ வேண்டியது; வெற்றி பெற்றால் காங்கிரஸுடைய வெற்றி!! பாஜக விமர்சனம்!

தேர்தல்களில் தோல்வியடைந்தால் இயந்திரங்கள் மீது காங்கிரஸ் குறை சொல்வதாக பாஜக விமர்சித்துள்ளது.மகாராஷ்டிரம், ஹரியாணா தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி ஏற்படுத்தப்பட்டதாக, தில்லியில் செவ... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கான போலி ரூபாய் நோட்டு எண்ணிக்கை!

கடந்த 2018-19 மற்றும் 2023-24 க்கு இடையிலான காலக்கட்டத்தில், புழக்கத்தில் இருந்த போலி ரூ.500 நோட்டுகள் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இது மட்டுமா? அண்மையில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 2,000 ... மேலும் பார்க்க