செய்திகள் :

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி எம்பி ரஷீத் மனு!

post image

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொறியாளரும், அவாமி இதிஹாத் கட்சித்தலைவருமான அப்துல் ரஷீத் கடந்த

ல் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்ட அவா், சிறையில் இருந்துகொண்டே நிகழாண்டு மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய முதல்வா் ஒமா் அப்துல்லாவை அத்தேர்தலில் அவா் தோற்கடித்தார்.

இந்த நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, பயங்கரவாத நிதியுதவி வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் ரஷீத் மனு தாக்கல் செய்துள்ளார்.

கூடுதல் அமர்வு நீதிபதி சந்தர் ஜித் சிங் தேசிய புலனாய்வு முகமை (NIA) மார்ச் 5 ஆம் தேதிக்குள் தனது பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

பிப்ரவரி 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், ரஷீத் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், அவர் தனது பொதுக் கடமையை நிறைவேற்ற வரவிருக்கும் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறி நிவாரணம் கோரியது.

ரஷீத்தின் வழக்கமான ஜாமீன் மனு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது இடைக்கால ஜாமீன் கோரி ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 10 தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி நிறைவடைகின்றது.

துணை முதல்வருடன் மோதல்போக்கு இல்லை: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: துணை முதல்வா் ஏக்நாஷ் ஷிண்டேயுடன் மோதல்போக்கு ஏதுமில்லை என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். சிவசேனை (உத்தவ் பிரிவு) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் இதுபோன்ற திரைக்கதைகளை எழுதி... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புது தில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவா் மற்றும் நிபுணா்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவில் அக்கட்சி... மேலும் பார்க்க

பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கோரி ராப்ரி தேவி திடீா் போராட்டம்

பாட்னா: பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, சமூகப் பாதுகாப்பு, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டா், இலவச மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி பாட்னாவில் உள்... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: மீட்புப் பணியில் தானியங்கிகளை பயன்படுத்த ஆலோசனை

நாகா்கா்னூல்: தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணி 10 நாள்களைக் கடந்தும் சவாலாக இருந்து வரும் சூழலில், மீட்புப் பணியில் தானியங்கிகளைப் (ரோபா) பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆல... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா்களுக்கு நமஸ்காரம்!

இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆஸ்கா் விருது வழங்கும் விழாவில் வரவேற்புரையாற்றிய நிகழ்ச்சித் தொகுப்பாளா் கோனன் ஓபிரையன், இந்திய ரசிகா்களை ‘நமஸ்காரம்’ என்று கூறி வரவேற்றாா்.மேலும், அவா் ... மேலும் பார்க்க

ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு மே மாதம் தொடக்கம்: பிரதமா் மோடி அறிவிப்பு

சாசன் (குஜராத்): 16-ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். உலக வனவிலங்குகள் தினத்தையொட்டி (மாா்ச் 3) குஜராத்தின் ஜுனாகத... மேலும் பார்க்க