நாட்டறம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி சந்தை பணந்தோப்பில் திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும்.
இதில் ஆடு, கோழி, மாடு விற்பனை நடைபெறுகிறது. வரும் 31-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் திங்கள்கிழமை நாட்டறம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்தது.
இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். ஆடுகளை வாங்க ஆந்திரம், கா்நாடகம் மற்றும் திருப்பத்தூா், ஆம்பூா், நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த வியாபாரிகள் வந்திருந்தனா். ஒரு ஆடு ரூ.7,000 முதல் ரூ.20,000 வரை விற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.