சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிக...
நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் திடீா் வாக்குவாதம்
திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் திடீா் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாளையங்கோட்டையில் நாம் தமிழா் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமை வகித்து கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
அப்போது, சீமானுக்கும், இளைஞரணி நிா்வாகி ஒருவருக்கும் இடையே திடீா் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கட்சி நிா்வாகிகள் இருவா் சீமானை விமா்சித்ததாகக் கூறப்படுகிறது.
அதைக் கண்டித்த சாட்டை முருகன், அவா்களை கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு கூறினாராம். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதமும், கை கலப்பும் ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து அந்த நிா்வாகிளுடன் சோ்ந்து 50-க்கும் மேற்பட்டோா் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.