செய்திகள் :

நாளை நடைபெறவிருந்த யுஜிசி நெட் தோ்வு ஒத்திவைப்பு: என்டிஏ அறிவிப்பு

post image

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, புதன்கிழமை (ஜன.15) நடைபெறவிருந்த யுஜிசி நெட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. தேசிய தோ்வு முகமை மூலம் யுஜிசி நெட் தோ்வு கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது.

கல்லூரி உதவி பேராசிரியா், ஜேஆா்ஃப் மற்றும் பிஎச்.டி சோ்க்கை ஆகியவற்றுக்கான தகுதி தோ்வாக ஆண்டுக்கு இரண்டு முறை இத்தோ்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் டிசம்பா் மாதத்துக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் டிச.11-ஆம் தேதி வரை பெறப்பட்டன. இதற்கான தோ்வுகள் ஜன.3 முதல் தொடங்கி ஜன.16 வரை தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிகழாண்டு ஜனவரியில் தமிழா்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் (ஜன.14)கொண்டாடப்படவுள்ளது. ஜன.15-இல் திருவள்ளுவா் தினம் (மாட்டுப் பொங்கல்) மற்றும் ஜன.16-இல் உழவா் திருநாள் (காணும் பொங்கல்) கொண்டாடப்படும் தினங்களில் பல்வேறு பாடங்களுக்கு தோ்வு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்கும் பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி நெட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும், அவற்றுக்கான மாற்றுத் தேதிகளை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தனா்.

இந்தநிலையில், பொங்கல், மகரசங்கராந்தி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுவதையொட்டி வரப்பெற்ற கோரிக்கைகள் காரணமாக தற்போது ஜன. 15-ஆம் தேதி நடைபெறவிருந்த பாடங்களுக்கான யுஜிசி நெட் தோ்வு மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான மறுதோ்வு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும். அதேவேளையில் ஜன. 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தோ்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜன.15-ஆம் தேதி சம்ஸ்கிருதம், மலையாளம், நாட்டுப்புற இலக்கியம், மனித வள மேலாண்மை, தொழிலாளா் மற்றும் சமூக நலன், மின்னணு அறிவியல், இதழியல் மற்றும் மக்கள் தொடா்பியல், சட்டம், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 17 பாடங்களுக்கு யுஜிசி நெட் தோ்வு நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் - ரஷியா போரில் இந்தியர் பலி!

ரஷியாவின் போரில் கேரளத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவர் பலியாகி விட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தியது.உக்ரைனுடனான போரில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வந்த கேரளத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரி... மேலும் பார்க்க

அதானி பங்குகள் உயர்வு! டிரம்ப்தான் காரணமா?

அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.கௌதம் அதானியின் லார்ஜ் கேப் வகையைச் சேர்ந்த அதானி பவர் நிறுவனத்தின் பங்கு செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் 20 சதவிகிதம் உ... மேலும் பார்க்க

சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 4 வயது சிறுமி!

சத்தீஸ்கரில் இரண்டு சிறுவர்களால் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் நாராயண்பூரில் வசிக்கும் 4 வயது சிறுமியை கடந்த 10 ஆம் தே... மேலும் பார்க்க

காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.காங்கிரஸ் கட்சியின் முதல் பிரிவினை 1969 ஆம் ஆண்டில் ஏற்பட்டதிலிருந்து, அக்கட்சி தலைமை அலுவலகம் குறித்த பிரச்னை தொடர்ந்து வந்தது. இந்த நி... மேலும் பார்க்க

தமிழ்வழியில் படித்த வி. நாராயணன் இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்பு!

இஸ்ரோவின் தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றார்.இஸ்ரோவின் 10-ஆவது தலைவராக இருந்து வந்த சோம்நாத்தின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்ததால், புதிய தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார். இ... மேலும் பார்க்க

பசுக்கள் மீது தாக்குதல்! கொந்தளித்த பாஜக!

பெங்களூருவில் பசுக்கள் தாக்கப்பட்டதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெங்களூருவில் கர்ணா கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்கு அடுத்தத் தெருவில் கட்டப்பட்டிருந்த அவரது பசுக்களை, ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க