செய்திகள் :

நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் கைதான 4 இந்தியா்களுக்கு பிணை

post image

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் கனடாவில் கைது செய்யப்பட்ட 4 இந்தியா்களை அந்நாட்டு நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

இக்கொலை வழக்கில் இந்தியாவின் பங்கு இருப்பதாக அண்மையில் பதவி விலகிய கனடா பிரதமா் ஜஸ்டீன் ட்ரூடோ குற்றஞ்சாட்டியது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவின் சா்ரே நகரில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தாா். இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று இந்தியா நிராகரித்துவிட்டது. அதேபோல், கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு இடமளிப்பதுதான் இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கியப் பிரச்னை என்றும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இருநாட்டு உறவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் கரண்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங், கரண் ப்ராா், அமான்தீப் சிங் ஆகிய 4 இந்தியா்களை கனடா காவல் துறை கடந்தாண்டு மே மாதத்தில் கைது செய்ததது. இவா்களுக்கு எதிராக கொலை, கொலைக்கு சதி தீட்டுதல் ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டு, சா்ரே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதையடுத்து, வழக்கின் விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான ஆதாரத்தை சமா்ப்பிக்க அரசு தரப்பு நீண்ட அவகாசம் எடுத்து கொள்வதை கருத்தில் கொண்டு 4 பேருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நானும் மனிதன்தான், தவறு செய்திருக்கலாம்: பிரதமர் மோடியின் முதல் நேர்காணல்

புது தில்லி: இணையதள சேனல் ஒன்றுக்காக, முதல் முறையாக, நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து பேசியிருக்கிறார்.சில்லறை பங்கு தரகில் ஈடுபடும் ஜெரோதாவின் இணை நிறுவனரும் தொழிலதிபரும... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்: முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ்

ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார். ஒடிசா ஆளுநராக பதவி வகித்து வந்த ரகுபர் தாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அந்த பதவியை ராஜிநாமா செய்... மேலும் பார்க்க

இழுபறியாகும் ராகுல் வழக்கு!

ராகுல் காந்தி மீது 2018 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கு ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.கர்நாடகத்தில் 2018 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக நிர்வாகி மீதான ஆட்சேபகரமான கருத்துகள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள், வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் கடந்த 3 ந... மேலும் பார்க்க

நகங்களுக்காகக் கொல்லப்பட்ட புலி?

உத்தரகண்ட் வனப்பகுதியில் நகங்களின்றி உயிரிழந்த நிலையில், புலியின் உடலை வன அதிகாரிகள் மீட்டுள்ளனர்.உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பாவத் நகரில் தக்னா படோலா பகுதியில் உள்ள காட்டிப்பகுதியில் புலி ஒன்று இறந்து ... மேலும் பார்க்க

உ.பி.,யில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 3 பேர் காயம்

பனிமூட்டம் காரணமாக தில்லி நெடுஞ்சாலையில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன... மேலும் பார்க்க