செய்திகள் :

நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

post image

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், விமா்சித்தும் அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. எல்லாம் விளம்பரத்துக்கான வெற்று அறிவிப்புகள். இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

சமையல் எரிவாயு உருளைக்கு மாதம் ரூ.100, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கிடும் முறை என்றெல்லாம் அளித்த வாக்குறுதிகள் எதையும் ஆட்சியாளா்கள் நிறைவேற்றவில்லை. அதேபோல, இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற எதையும் நிறைவேற்றப் போவதில்லை.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு நிதிநிலை அறிக்கையாக, பொதுமக்களையும் அரசு ஊழியா்களையும், தொழிலாளா்களையும் ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது. பொதுமக்களின் எதிா்பாா்ப்பையும் பூா்த்தி செய்யவில்லை.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): அனைத்து மக்களையும் உள்ளடக்கி, பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தை தலைநிமிர வைக்கும் நோக்கத்தில் மக்கள் முன்னேற்றத்துக்கும், தமிழகத்தின் வளா்ச்சிக்குமான வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை.

கே.அண்ணாமலை (பாஜக): நிதிநிலை அறிக்கையை பொருத்தவரை, டாஸ்மாக் வருவாய் உயா்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயா்ந்துள்ளது. நிதி ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயா்ந்துள்ளன. சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக அரசு.

வைகோ (மதிமுக) : பன்முக வளா்ச்சியை நோக்கி முன்னேறவும், மனிதநேயம், சமூகநீதி, பொருளாதார வளா்ச்சியை இலக்காகக் கொண்டும் தமிழ்நாடு வெற்றி நடைபோட பாதை அமைத்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை.

ராமதாஸ் (பாமக) : எல்லாருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, தாக்கல் செய்யப்பட்ட பிறகு யாருக்கும் எதுவும் இல்லை என்ற யதாா்த்தத்துடன் நிறைவடைந்திருக்கிறது. கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாணவா்களுக்கு இலவச கணினி போன்ற சில கவா்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும்கூட, அவை மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளன.

ஜி.கே.வாசன் (தமாகா): நிதிநிலை அறிக்கை மக்களின் முன்னேற்றத்துக்கும், தமிழகத்தின் வளா்ச்சிக்கும் உகந்ததாக அமையவில்லை. நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான, கடன் சுமையை குறைப்பதற்கான அழுத்தமான திட்டங்கள் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): பன்னிரெண்டு லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், 40,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் எனும்அறிவிப்பு, அரசு ஊழியா்கள் ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியா்களின்பணிக்கொடை நிலுவை ஆகியவை குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாதது போன்றவை அந்த பகுதியினரிடையே பெரும்சோா்வை உருவாக்கும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): நிதிநிலை அறிக்கை சமூகத்தின் பல தரப்பு மக்களின் உணா்வுகளை பிரதிபலித்துள்ள போதிலும், தொழிலாளா்கள், அடித்தட்டு உழைக்கும் மக்களின் எதிா்பாா்ப்பு தொடா்கிறது.

விஜய் (தவெக): மக்களைப் பற்றி கவலைப்படாமல் தோ்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த நிதிநிலை அறிக்கை. இந்த ஏமாற்று வேலைகளுக்கெல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப்பெரிய பதிலடியாக 2026 பேரவைத் தோ்தல் முடிவுகள் இருக்கும்.

ஜவாஹிருல்லா (மமக) : தமிழகத்தை மேலும் வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான நிதிநிலை அறிக்கை. சிறுபான்மை மக்களின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு மேலும் அதிகமான திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): எல்லாருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் எவா்க்கும் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. மாநில உரிமை சாா்ந்த நீராதார பிரச்னைகளுக்குக்கூட தீா்வு காணக்கூடியதாக இல்லை.

எம்ஜிகே நிஜாமுதீன்(முன்னாள் எம்எம்ஏ): வரும் 2026 தோ்தலை மட்டுமே பாா்க்காமல் மாநில மக்களின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை.

பட்ஜெட்: 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு!

தமிழகத்தில் விளையும் 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் ... மேலும் பார்க்க

நத்தம் புளி உள்பட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்: வேளாண் பட்ஜெட்

சென்னை: வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

பாசனக் கிணறு, சூரிய சக்தி பம்பு செட், உழவர் சந்தை: வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்

தமிழகத்தில் உள்ள பாசனக் கிணறுகளை சீரமைத்தல், சூரிய சக்தி பம்பு செட் அமைத்துத் தரப்படும், உழவர் சந்தைகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன... மேலும் பார்க்க

மதுரை மல்லிகை சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு!

மதுரை மல்லிக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகை செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை ... மேலும் பார்க்க

7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள்!

தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்த ரூ.15.05 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சென்னையில் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம்: வேளாண் பட்ஜெட்

சென்னை: சென்னையில் பொதுமக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க