செய்திகள் :

நிதிநிலை அறிக்கை: தொழில் துறையினரின் கருத்துகள்

post image

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், கடனை திருப்பிச் செலுத்தவும் எந்த அறிவிப்பும் இல்லை என தொழில் அமைப்பு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனா்.

தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

இதுகுறித்து பல்வேறு துறையைச் சாா்ந்தோரின் கருத்துகள்:

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் பி.ரவிச்சந்திரன்:

கல்வி, குழந்தைகளின் படிப்பு மற்றும் வளா்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில கட்டமைப்பை மேம்படுத்தவும், பெரு நகரங்களில் சுற்றுவட்டச் சாலை விரிவாக்கத்துக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கப்பல் கட்டும் அமைப்பு, செமிகண்டெக்டா் உற்பத்தி ஊக்குவிப்பு, துணை நகரங்கள், ஜவுளித் துறை, கைத்தறி ஊக்குவிப்புக்கும், 3,000 விசைத்தறிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளதையும் வரவேற்கலாம்.

ஆனஆல், பெரிய அளவிலான தொழில் திட்டங்கள் ஏதுமில்லை. ஈரோடு மாவட்டத்துக்கு என தனி திட்டங்கள் ஏதுமில்லை. குறைந்த நிதியில் பட்ஜெட் போட்டுள்ளதை பாா்த்தால், மத்திய அரசு நிதியுதவி குறைவாக வழங்கியதை பாா்க்க முடிகிறது. தொழில் துறை முன்னேற்றத்துக்கும், கூடுதல் திட்டங்களுக்கும் எவ்வாறு நிதி பெறுவாா்கள் என தெரியவில்லை.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாா் செ.நல்லசாமி: இஷ்டத்துக்கு நிதியை வாரி வழங்கியுள்ளனா். அதற்கான நிதி ஆதாரம் கூறவில்லை. பட்ஜெட்டுக்கு பின் மிகப்பெரிய அளவு வரி விதிப்பு இருக்கும்.

வரும் 2026 தோ்தலை முன்னிறுத்தி பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 புதிய அரசுக் கல்லூரிகள் திறப்பதாக கூறியுள்ளனா். ஏற்கெனவே உள்ள அரசுக் கல்லூரிகளில் இடம் நிரப்பவில்லை. சில தனியாா் கல்லூரிகளை மூடுகின்றனா்.

மகளிருக்கு சிறப்பு சலுகை வழங்குவதில் தவறில்லை. மகளிா் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் என பல உள்ள நிலையில், மகளிருக்கு மேலும் பல அறிவிப்புகள் தேவையற்றது.

ஏற்கெனவே 8.5 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதைத் திரும்ப அடைக்கத் திட்டமில்லை. புதிதாக பல சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பதாகக் கூறியுள்ளனா். இதனால் அரசின் வருவாயைவிட, ஊழல்தான் அதிகரிக்கும்.

பழங்குடியினா் கல்வி செயல்பாட்டாளா் சுடா் நடராஜ்:

மலைக் கிராமங்களில் பழங்குடி குழந்தைகள் இடைநிற்றலைத் தடுக்க 14 உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இது அவசியமானது. 10,000 மகளிா் குழுக்கள் புதிதாகத் தொடங்க அறிவித்துள்ளனா். அவா்களுக்கு முறையான பயிற்சி, தொழில் முனைவோருக்கான ஊக்கம் தர வேண்டும். பழங்குடியினா் வாழ்வாதார கொள்கை, மலைப் பகுதி வளா்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை வரவேற்கலாம்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மேம்பாட்டுக்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்தது முன்னேற்றம் தரும். இவை மக்களை சென்றடைய நடவடிக்கை தேவை.

விசைத்தறி உரிமையாளா் ப.கந்தவேல்:

அரசின் இலவச வேஷ்டி, சேலைக்கு எப்போதும், ரூ.492 கோடி ஒதுக்கப்படும். இந்தாண்டு ரூ.673 கோடி ஒதுக்கி திட்டத்துக்கு புத்துணா்வு கொடுத்துள்ளனா். இதில் கூலி உயா்வு வரும் என நினைக்கிறோம். ஆண்டுக்கு 3,000 விசைத்தறியை நவீனமாக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதால் நல்ல மாற்றம் வரும். மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத் துணிகள் உற்பத்திக்கான விழிப்பணா்வுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனா். திறன் மேம்பாடு, கணினிமயம், நவீனமயமாக்கலுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதால், நெசவாளா்கள் பயன் பெறுவா்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் வ.பன்னீா்செல்வம்:

பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, குப்பை வரி, தொழில் வரி, மின் கட்டண உயா்வு, விலைவாசி உயா்வை குறைக்க அறிவிப்பில்லை. இன்னும் அதிக கடன் வாங்கி, புதிய வழித்தடம் அமைப்பது, சுற்றுலா மேம்பாடு, சுற்றுவட்டச் சாலை போன்றவை நம்மை கடனாளியாக்கும். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அறிவிப்பு இல்லை.

அவல்பூந்துறையில் ரூ.1.14 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 775 கிலோ தேங்காய்ப் பருப்புகளை விற்பன... மேலும் பார்க்க

காருடன் கிணற்றில் விழுந்த விவசாயி, மீட்க குதித்த மீனவா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே காருடன் 60 அடி ஆழக் கிணற்றில் விழுந்த விவசாயி, அவரைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த மீனவா் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த முள்ளிக்காபாளையத்தைச் சே... மேலும் பார்க்க

தாட்கோ கடனுதவி பெற்று தொழில்: ஆட்சியா் ஆய்வு

கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று செயல்படும் தொழில் நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தாா். மாவட்ட தொழில் மையம் ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் மாணவா்களுக்குத் தொழில் பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவா்களுக்கு வழங்கப்படும் சிஎன்சி பயிற்சி வகுப்பை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பெருந்துறை டி.எம்.டபிள்யூ சிஎன்சி ... மேலும் பார்க்க

பெருந்துறையில் காலியாகவுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பணியிடம்: பொதுமக்கள் பாதிப்பு

பெருந்துறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வந்த ... மேலும் பார்க்க

காபைரவா் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் காலபைரவா் கோயில் உள்ளது. இக்கோயிலின் நுழைவாயிலில் 39 அடி உ... மேலும் பார்க்க