செய்திகள் :

நிதி இலக்குகளை அடைய எப்படி முதலீடு செய்ய வேண்டும்..? - வேலூரில் வழிகாட்டும் நிகழ்ச்சி!

post image

நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சி வேலூரில் நடைபெற உள்ளது.

 முதலீடு என்றால் என்ன? எங்கே, எப்படி முதலீடு செய்வது. முதலீட்டில் நிறைய வழிமுறைகள் உள்ளதே. மியூச்சுவல் ஃபண்டுகளில் நிறைய திட்டங்கள் உள்ளதே. எதை தேர்வு செய்யலாம். எது லாபம் தரும், எது நமக்கு ஏற்ற திட்டம்? இப்படி பல கேள்விகளும் அச்சங்களும் நம் முன்னே உள்ளன.

இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

முதலீட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்  வருமானம் (Returns) ஆகும். லாபம் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளில்தான் நாம் முதலீடு செய்கிறோம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இலக்கு (Goals) அடிப்படையில் முதலீடு செய்யும் போது அது அதிக பலன்களை தருவதை பார்க்க முடிகிறது.

இலக்கு அடிப்படையில் முதலீடு செய்யும் போது தேவையான தொகுப்பு நிதி (Corpus Fund) சரியாக சேர்ந்துவிடுகிறது. 

பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், சொந்த வீடு, பணி ஓய்வுக் காலம் ஆகியவை நம்முடைய முக்கிய நிதி இலக்குகளாக இருக்கிறது.

 நம்முடைய முதலீட்டில் லாபகரமான வருமானம், குறிப்பாக பணவீக்க விகிதத்தை (Inflation Rate) விட இரண்டு மடங்கு வருமானம் இருந்தால்தான் சரியானதாகும்.

இதற்காக வழிகாட்டும் விதமாக நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து, 'இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!’ என்ற நிகழ்ச்சியை வேலூரில் நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் நிதி நிபுணர், சோம வள்ளியப்பன் சிறப்புரை ஆற்றுகிறார்.

மேலும், மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மேலாளர் கோபிநாத் சங்கரன் வழிகாட்டுகிறார்.

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்ய வேலூருக்கு வாருங்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். முன்பதிவு செய்யுங்கள்: https://bit.ly/miraeassetMF

 இந்த நிகழ்ச்சி நடைபெறும் விவரங்கள்:

நிகழ்ச்சி நடைபெறும் விவரங்கள்

இடம்: வேலூர்.

நாள்: 2024 -நவம்பர் 16, சனிக் கிழமை மாலை 6.30 pm – 8.30 pm

மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!

'ஒண்ணாம் தேதி சம்பளம் வருது... பத்தாம் தேதியே கையில ஒண்ணும் மிஞ்சறது இல்ல' என்ற நிலை தான் இன்று பலருக்கும் உள்ளது. இதற்கு, பிளானிங் இல்லாதது தான் முக்கிய காரணம். பிளான் சரியாக செய்து...அதை நடைமுறைப்பட... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.17,000 கோடி... கொள்ளைபோகும் மக்கள் பணம்... ஆன்லைன் மோசடிகளுக்கு என்றுதான் முடிவு?

ஒரு வழியாக மத்திய அரசாங்கம் தூங்கி விழித்திருக்கிறது. ஆம், ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம், ஆன்லைன் கொள்ளையர்களால் சுருட்டப்பட்டுக் கொண்டிருக்க, பறிகொடுத்த மக்களின் கதறல்கள், அரசாங்கத்த... மேலும் பார்க்க

அடுத்த இதழ்... நாணயம் விகடன் 20-ம் ஆண்டு சிறப்பிதழ்

அடுத்த இதழ்...நாணயம் விகடன் 20-ம் ஆண்டு சிறப்பிதழ் மேலும் பார்க்க

``குற்றச்செயலில் வந்த பணத்தில் சுகேஷ் கிப்ட் வாங்கி கொடுத்தார் என்று தெரியாது'' -நடிகை ஜாக்குலின்

நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் கொடுத்த பரிசுகள்பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரிமினல் சுகேஷ் சந்திரசேகருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக ஏற்கெனவே குற்றம் சாட... மேலும் பார்க்க

எல்லாவற்றுக்கும் நீதிமன்றம்தான் என்றால்... அரசும் அதிகாரிகளும் எதற்கு?

‘கால் வைத்த இடமெல்லாம் கன்னி வெடி’ என்று சொல்வதுபோல், பொதுவெளி மற்றும் இணையவெளி என எங்கு பார்த்தாலும் விதவிதமாக... வகை வகையாக நிதி மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன. எம்.எல்.எம் என்ற மல்ட்டி லெவல் மார்க்கெ... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரூ.1.20 கோடி மோசடி; 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் பெங்களூரில் கைது... என்ன நடந்தது?

சேலத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (51). இவர் ஈரோட்டில் கடந்த 2002-இல் கம்ப்யூட்டர் டேட்டா நிறுவனத்தை நடத்தி வந்தார். முன்பணம் கட்டினால் அதற்கேற்ப டேட்டா வேலை தருவதாகவும், வேலை முடிந்து ஒப்படைத்ததும், செல... மேலும் பார்க்க