செய்திகள் :

`நீக்கப்பட்ட செங்கோட்டையன்' - எடப்பாடி வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் முடிவு

post image

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதித்தார். இதை தெரிவித்த 24 மணி நேரத்திற்குள், செங்கோட்டையன் அ.தி.மு.கவில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இருப்பினும் கட்சியின் மூத்த தலைவராக இருப்பதால், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அ.தி.மு.க தலைமை இருந்தது.

இபிஎஸ் இல்லம்

இந்த நிலையில், அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் இணைந்து செங்கோட்டையன், நேற்று பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த சம்பவம் அ.தி.மு.க உறுப்பினர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க

ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன... மேலும் பார்க்க

`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்அ.தி.மு.க முன்னாள் அமை... மேலும் பார்க்க

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க