செய்திகள் :

`நீங்க எங்க எதிரி இல்லை; தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள்' - TVK விமர்சனத்துக்கு NTK பதில்

post image

த.வெ.க எதற்குக் குறுக்கே வந்து விழுகிறது?

தேர்தல் வியூக வகுப்பாளர்களின் ஆலோசனையில் அரசியல் மேற்கொள்வது `பணக்கொழுப்பு’ என நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் விமர்சனத்துக்கு ரியாக்ட் செய்த த.வெ.க தரப்பு `திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவதில் ஆச்சரியமில்லை’ என்றது. இந்நிலையில் சீமான் `பணக்கொழுப்பு` என பொதுவாகவே சொன்னார் என விளக்கமளித்திருக்கிறார் நா.த.க கொள்கைப் பரப்புச் செயலாளர் துரைமுருகன்.

சாட்டை துரைமுருகன்

நா.த.க சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ``தேர்தல் நிபுணர்கள், வியூக வகுப்பாளர்களைக் கொண்டு தேர்தலையும், அரசியலையும் எதிர்கொள்ளும் அபத்தமான முறை இங்கு கையாளப்படுகிறது. அதனை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை என்றார் அண்ணன் சீமான். அந்த நடவடிக்கைகளை, ‘பணக்கொழுப்பு’ என பொதுவாகச் சொல்லப்பட்ட விமர்சனத்திற்கு த.வெ.க எதற்குக் குறுக்கே வந்து விழுகிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளது நா.த.க.

தொடர்ந்து ``திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வது தொடர்பாக எழுந்த சிக்கல் குறித்து வாய்திறக்க மாட்டோமென பத்து நாட்களுக்கு மேல் மௌன விரதம் இருந்தவர்கள், இப்போது பொத்தாம் பொதுவான விமர்சனத்திற்குப் பொங்குவதேன்? தர்க்கரீதியாக விடையளிக்க வக்கற்றவர்கள், திரள்நிதியென ஏளனம் செய்வது பணக்கொழுப்பு மட்டுமல்ல, வாய்க்கொழுப்பும்கூட!

சீமான், விஜய்

திராவிட இயக்கங்கள் தொடங்கி, கம்யூனிச இயக்கங்கள்வரை திரள்நிதி திரட்டியே அமைப்பைக் கட்டியிருக்கிறார்கள் என்பது அரசியல் அறிவுகொண்ட எல்லோருக்கும் தெரியும். அதேசமயம், லாட்டரி விற்பதும், இணையச் சூதாட்டத்தில் கல்லா கட்டுவதும், திரைப்படத்தின் டிக்கெட்டை பலமடங்கு ஏற்றி விற்றுப்பிழைப்பதும் பெருங்குற்றம் என்பதை த.வெ.கவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியைச் சேர்ந்த உறவுகளுக்கும் நினைவூட்டுகிறோம். த.வெ.க-வின் கொள்கை தலைவரான பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்காத அக்கட்சி, பிரசாந்த் கிஷோர் குறித்து பேசியதற்கு துடிக்கிறார்கள். அப்படியென்றால் பி.கே-தான் அவர்களது கொள்கைத் தலைவரா எனக் கேட்கத் தோன்றுகிறது.

சீமான்

த.வெ.க-வுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். எங்களுக்கு எதிரி நீங்கள் இல்லை. தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள். விழுந்தால், வரும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றிருக்கிறார் துரைமுருகன்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

"திராவிட மாடல் ஆட்சியைக் காமராஜர் ஆட்சியாகப் பார்க்கிறோம்" - செல்வப்பெருந்தகை பளீச்

"இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட 'ஈகோ' மோதல்தான் டெல்லியில் பா.ஜ.க வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?""டெல்லியில் 100 சதுர அடியில் 60 வாக்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.... மேலும் பார்க்க

இன்று அறிமுகமான `புதிய வருமான வரிச் சட்டம்!' -முக்கிய அம்சங்கள் என்னென்ன?!

கடந்த 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர், 'அடுத்த வாரம் புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்' என்று கூறியது, இன்று நிறைவேறி இருக்கிறது.இன்று நடந்த கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ப... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மருத்துவமனைக்கு அருகில் குப்பைக் குவியல்... சுகாதார சீர்கேடால் மக்கள் அச்சம்!

தூத்துக்குடி மாவட்டம், T.சவேரியார்புரம்அருகிலுள்ள வடக்குசோட்டையன்தோப்பு பேருந்து நிலையத்தின் எதிரே தொழுநோய் மருத்துவமனை அமைந்துள்ளது. மருத்துவமனைக்கு முன்பும், எதிரே உள்ள பகுதிகளிலும் குப்பைகள் குவிந்... மேலும் பார்க்க

New Income Tax Bill: இன்று தாக்கல் செய்யப்படும் புதிய வருமான வரி மசோதா - என்ன மாற்றங்கள் இருக்கும்?

New Income Tax Billபிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை இன்று தாக்கல் செய்கிறது. 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 60 ஆண்டுகளா... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் தொடரும் நாய்களின் தொல்லை..'' -உங்கள் பகுதியில் நடந்தது என்ன? - #கருத்துக்களம்

நன்றியுள்ளப் பிராணியாக கொண்டாடப்படும் நாய், பலரின் செல்லப் பிரணியாகவும் வளர்ந்து வருகிறது. சிலர் 'தெரு நாய்களும் பாவம்' எனக் காருண்யத்துடன் உணவு வழங்கி பராமரித்து வருகின்றனர். வீடுகளில் வளர்க்கும் நாய... மேலும் பார்க்க

Freebies: ``இலவசங்களால் மக்கள் வேலை செய்யத் தயாராக இல்லை" - சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்

தேர்தல்களின்போது இலவசங்களை அறிவிக்கும் வழக்கத்தை உச்ச நீதிமன்றம் இன்று விமர்சித்திருக்கிறது.இந்தியாவில், தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், மக்கள் வாங்கு... மேலும் பார்க்க