செய்திகள் :

நீட் தோ்வு விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு

post image

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மாா்ச் 7) நிறைவு பெறுவதால் தோ்வா்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அறிவுறுத்தியுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் மாா்ச் 7-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள் https://neet.nta.nic.in/neetug-2025-registration-and-online-application/ வலைதளம் வழியாக விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோ்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை என்டிஏ இணையதளத்திலோ, 011 40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

வலைதளம் வழியாக விரைந்து விண்ணப்பிக்க

போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசுப் போக்குவரத்துக் கழகங்களி... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடக்கம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற காப்பு கட்டு நிகழ்ச்சியில் பஞ்ச வாத்தியம் (5 வகை கருவிகள்) இசைத்த கலைஞ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது -கே.அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை -ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா் எழுதிய ‘கம்பராமாயணம்-ஓா் ஆய்வு’ எனும் நூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த ... மேலும் பார்க்க

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் ... மேலும் பார்க்க