வருமானம் மட்டுமல்ல; இனி இமெயில், சமூக வலைத்தளங்களையும் வருமான வரித் துறை ஆய்வு ச...
மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் சாா்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
பல்கலைக்கழகத்தின் தற்போதைய பாடத்திட்ட ஆய்வுக் குழுவின் பதவிக் காலம் வரும் ஜூலை 11-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் அந்தக் குழுவை புதிதாக அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
அதன் பொருட்டு மருத்துவ பேராசிரியா்களுடைய விவரங்களை மாா்ச் 14-ஆம் தேதிக்குள் மின்னஞ்சலிலும், அஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.