செய்திகள் :

நீலகிரியில் முகக் கவசம் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு!

post image

உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 2 பேர் எச்எம்பி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று(ஜன. 6) பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்ந்நோய்த் தொற்றால் உடலிலி பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில், நோய்ப் பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகள் இருவருக்கு எச்எம்பி தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது

இந்த நிலையில், கர்நாடக எல்லையையொட்டி நீலகிரி மாவட்டப் பகுதிகள் அமைந்துள்ள நிலையில், முன்னெச்சரிகை நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்லது.

நடராஜர் கோயில் தெருவடைச்சான் வீதி உலா கோலாகலம்!

சிதம்பரம்: இந்தியாவிலேயே முதன்முறையாக மூன்று லட்சம் ருத்ராட்சங்களைக் கொண்டு செய்யப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா புதன்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.சிவ வாத்தியங்கள் முழங்க ... மேலும் பார்க்க

காவேரிப்பட்டிணத்தில் ஜிம் உரிமையாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பறிமுதல்!

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணத்தில் ஜிம் உரிமையாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம், கருக்கண் சாவடிய... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: பொங்கலுக்காக முன்கூட்டியே வரவு வைப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.வழக்கமாக மாதம்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 வரவு வைக்கப்படும் நிலையில், பொங்க... மேலும் பார்க்க

பொங்கல் தொகுப்பு விநியோகம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சின்னமலையில் உள்ள நியாயவிலைக் கடையில் பரிசுத் தொகுப்பை மக்களுக்கு... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக நேற்று (ஜன. 9... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் இருந்து திரும்பிய பக்தர்கள் பேருந்து - லாரி மோதல்: 4 பேர் பலி!

வேலூர்: ராணிப்பேட்டை அருகே மேல்மருவத்தூரில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிய கர்நாடக பக்தர்கள் சென்ற பேருந்து, லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். மேலும், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமன... மேலும் பார்க்க