குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
நீ பெரிய அறிவாளியா? மிஷ்கினை கண்டித்த அருள்தாஸ்!
இயக்குநர் மிஷ்கினை நடிகர் அருள்தாஸ் கடுமையாகக் கண்டித்து பேசியுள்ளார்.
பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பலர் பேசினர். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மதுப்பழக்கத்தைக் கொண்டாடுவதாகக் கூறி தன் பேச்சை துவங்கினார்.
பேச்சின் இடையே, பலமுறை தகாத வார்த்தைகளையும் பிறரைக் காயப்படுத்தும் தொனியிலும் பேசியது சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் வெற்றி மாறன், லிங்குசாமி உள்ளிட்டவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்தது அவர்களின் முகத்தில் தெரிந்தது.
இதையும் படிக்க: எஸ்கே - 25 படத்தின் பெயர் இதுவா?
இந்த நிலையில், 2கே லவ் ஸ்டோரி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் அருள்தாஸ், “மேடையில் எப்படி பேச வேண்டும் என மிஷ்கின் தெரிந்துகொள்ள வேண்டும். பல புத்தகங்களைப் படித்து உலக சினிமாக்களை பார்த்தால் மட்டும் போதாது. நாகரீகம் தெரிய வேண்டும். இளையராஜா, பாலா போன்ற வயதில் மூத்த சாதனையாளர்களை அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார். முதலில் நீ யார்? பெரிய அறிவாளியா? உலக சினிமாவிலிருந்து காட்சிகளை நகல் செய்யும் போலியான அறிவாளி. இனி மேடையில் பேசும்போது நாகரீகமாக பேசுங்கள்.” எனக் கடுமையாக தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க: மிஷ்கின் பேச்சால் சங்கடத்திற்கு ஆளான வெற்றி மாறன்!