சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
நெல்லை மாவட்ட திமுக மாற்றியமைப்பு
திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்ட திமுக மாற்றியமைப்பு திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!
திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள் - மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்.
— DMK (@arivalayam) September 26, 2025
- தலைமைக் கழக அறிவிப்பு#DMKpic.twitter.com/I8y8SfltLm
அதன்படி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் தொகுதிகள் அடங்கிய நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆவுடையப்பன் மற்றும் நாங்குநேரி, இராதாபுரம் தொகுதிகள் அடங்கிய நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கிரகாம்பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனையை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கவுள்ள நிலையில் இந்த உத்தரவு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.