செய்திகள் :

``நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? - எடப்பாடி கேள்வி

post image

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 - ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னுடைய குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக தொடர்ச்சியாக தன்னால் பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. அதனால், விருப்ப ஓய்வில் செல்ல விரும்புகிறேன். எனவே, எனக்கு விருப்ப ஓய்வு செல்ல அனுமதி வழங்குமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். அதில் இந்த விவகாரத்தை தொட்டு பேசியவர்,

dsp

"மயிலாடுதுறையில் நேர்மையாக பணிபுரிந்த டி.எஸ்.பி-யின் (சுந்தரேசன்) வாகனத்தை பறித்து அவரை பணிசெய்ய விடாமல் தடுத்து, சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

அதேபோல், திருச்சியில் தற்போது குற்றப்பிரிவு டி.எஸ்.பி-யாக பணியாற்றும் பரத் சீனிவாஸ் மனஉளைச்சலால் பணியை ராஜினாமா செய்வதாக உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது?. காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாததால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த விவகாரம் குறித்து, காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தால், காவல்துறையில் சில சாத்தியமற்ற வேலைகளை செய்யச் சொல்லி உயரதிகாரிகள் வற்புறுத்துவதாகவும், அதனால் மனஉளைச்சல் காரணமாக அவர் விரும்ப ஓய்வில் செல்ல முடிவெடுத்தாகவும் கூறப்படுகிறது.

ஆனால், டி.எஸ்.பி பரத் சீனிவாசோ, "நான் மனஉளைச்சலில் இருந்தது உண்மைதான். அதனால், விருப்ப ஓய்வு கடிதம் தயார் செய்து நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தேன். ஆனால், எனது நலனில் அக்கறைகொண்டு பலரும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால்,இந்த கடிதத்தை யாருக்கும் அனுப்பவில்லை' என்று கூறி வருகிறாராம்.

திருச்சியில் பணியாற்றும் டி.எஸ்.பி ஒருவர் மனஉளைச்சலால் விருப்ப ஓய்வு கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகச் சொல்லப்படும் சம்பவம், திருச்சி காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

"தமிழ்நாடை 'கஞ்சா' நாடு என மாற்றிவிடுங்கள்!" - ஸ்டாலினுக்கு எதிராக சீறும் அன்புமணி!

'அன்புமணி நடைபயணம்!'தமிழக உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் பாமகவின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இதில் இரண்டாம் நாளான இன்று செங்கல்பட்டில் மக்கள் மத்தியில் பேசிய... மேலும் பார்க்க

`காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற பொம்மை முதல்வர்!' - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

"உதவி ஆய்வாளர் ராஜராமன் கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக அரசை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் ப... மேலும் பார்க்க

ECI முறைகேடு: `எங்களிடம் ஆதாரமிருக்கிறது' - Rahul Gandhi | Kamal DMK BJP | Imperfect Show 25.7.2025

* இந்திராவை முந்திய மோடி? * பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது? - வெளியுறவு அமைச்சகம் பதில்! * இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம் கையெழுத்து?* “இந்தியர்களை பணியமர்த்துவதை நிறுத்த வ... மேலும் பார்க்க

'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' - முழு விவரம்!

'அன்புமணி நடைபயணம்..'பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் 'உரிமை மீட்க தலைமுறை காக்க...' என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். அன்புமணிபாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்ப... மேலும் பார்க்க

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் | Interview

சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வர... மேலும் பார்க்க