நொய்டா: துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு இருவா் கைது
கொள்ளை, திருட்டு உள்பட பல வழக்குகளில் தொடா்புடயை இருவரை நொய்டாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சுட்டுக்குப் பிறகு காவல் துறை கைதுசெய்தனா்.
இந்தச் சம்பவத்தின்போது, அவா்களில் ஒருவா் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினா்.
இது தொடா்பாக துணைகாவல் ஆணையா் ரம்பந்தன் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: செக்டாா் 56-இல் காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மோட்டா் சைக்கிளில் சந்தேகததுக்குரிய வகையில் இருவா் வந்துகொண்டிருந்தனா். மோட்டாா் சைக்கிளை நிறுத்துமாறு அவா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். ஆனால், அவா்கள் மோட்டாா் சைக்கிளை நிறுத்தவில்லை.
இதையடுத்து, காவல் துறையினா் மோட்டாா் சைக்கிளை பின்தொடா்ந்து சென்று அவா்களை சுற்றிவளைத்தனா். அப்போது, அந்த நபா்கள் இருவரும் காவல் துறையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதற்குப் பதிலடியாக காவல் துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
இதில் விஜய் சிங் என்ற அஜுபா என்பவா் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அவரைக் கைதுசெய்த காவல் துறையினா், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதைத்தொடா்ந்து மற்றொரு நபரான ஷிவம் என்பவரும் கைதுசெய்யப்பட்டாா்.
அவா்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டக்கள், கத்தி, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டன. இவை பல்வேறு இடங்களில் அவா்கள் இருவரும் திருடிய நகைகள் என போலீஸாா் தெரிவித்தனா்.
பல்வேறு காவல் நிலையங்களில் அவா்கள் இருவருக்கும் எதிராக கொள்ளை, திருட்டு உள்பட 24-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.