பஞ்சாப்: இஸ்லாமாபாத் காவல் நிலையத்தில் குண்டுவெடிப்பு!
பஞ்சாபில் உள்ள இஸ்லாமாபாத் காவல் நிலையத்தில் அதிகாலை 3 மணியளவில் குண்டு வெடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் கூறுகையில்,
அதிகாலை 3 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ஆனால் எந்த சேதமும், யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. மாநிலத்தில் கடந்த சில நாள்களாக இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சந்தேக நபர்களை இருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 10 பேரை கைது செய்தோம், இரண்டு சகோதரர்களும் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் சிறார். இன்னும் 3 பேர் எங்கள் இலக்கில் உள்ளனர், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.