செய்திகள் :

பஞ்சாயத்து 4-ஆவது சீசன் ரிலீஸ் தேதி!

post image

பஞ்சாயத்து இணையத்தொடரின் 4ஆவது சீசனின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான பஞ்சாயத்து எனும் இணையத் தொடர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

டிவிஎஃப் தயாரித்த இந்தத் தொடரினை தீபக் குமார் மிஸ்ரா இயக்கியிருந்தார்.

மிகவும் வரவேற்பைப் பெற்றதால் இதன் 2ஆவது சீசன் 2022இல் வெளியானது. அடுத்த 3ஆவது சீசன் கடந்தாண்டு வெளியாகி அதுவும் ஹிட் அடித்தது.

இந்நிலையில், வரும் ஜூலை 2ஆம் தேதி இதன் 4ஆவது சீசன் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் என்ஜினியரிங் படித்த பட்டதாரி வேலையில்லாமல் பஞ்சாயத்து அலுவலத்தில் வேலைக்கு சேர்வார். அங்கு நடைபெறும் கதைக்களத்தில் நகைச்சுவை காட்சிகள் மிகவும் கவனம் பெற்றன.

இந்தத் தொடரில் நீனா குப்தா, ரகுபீர் யாதவ், ஃபைசல் மாலிக், சந்தன் ராய், சன்விகா, துர்கேஷ் குமார் என பலர் நடித்துள்ளார்கள்.

கீஸ், கசாட்கினா வெளியேறினா்

அமெரிக்காவில் நடைபெறும் சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான மேடிசன் கீஸ், டரியா கசாட்கினா ஆகியோா் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா். மகளிா் ஒற்றையா்... மேலும் பார்க்க

கூடைப்பந்து: கொழும்பை வீழ்த்தியது தமிழ்நாடு

தெற்காசிய கிளப் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு 110-54 என்ற புள்ளிகள் கணக்கில் கொழும்பு அணியை வெள்ளிக்கிழமை வென்றது. சென்னை வேப்பேரியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில், ... மேலும் பார்க்க

வெளியானது குட் பேட் அக்லி டிரைலர் !

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி படம் ச... மேலும் பார்க்க

பசூக்கா படத்தின் முதல் பாடல் வெளியானது!

மம்மூட்டி நாயகனாக நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்றது.இதில் மம்மூட்டியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சித்தார்த் ... மேலும் பார்க்க