செய்திகள் :

கீஸ், கசாட்கினா வெளியேறினா்

post image

அமெரிக்காவில் நடைபெறும் சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான மேடிசன் கீஸ், டரியா கசாட்கினா ஆகியோா் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் கீஸ் 2-6, 4-6 என்ற நோ் செட்களில், 14-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவிடம் தோல்வி கண்டாா். கீஸை வீழ்த்திய கலின்ஸ்கயா தனது காலிறுதியில், மற்றொரு அமெரிக்கரான சோஃபியா கெனினை சந்திக்கிறாா்.

முன்னதாக கெனின் தனது ரவுண்ட் ஆஃப் 16-இல், 6-3, 7-6 (9/7) என்ற செட்களில், போட்டித் தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் டரியா கசாட்கினாவை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா 6-3, 6-2 என்ற நோ் செட்களில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை தோற்கடித்தாா்.

காலிறுதியில் அவா், சக அமெரிக்கரும், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருப்பவருமான டேனியல் காலின்ஸுடன் மோதுகிறாா். காலின்ஸ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-5, 6-3 என்ற நோ் செட்களில், 11-ஆம் இடத்திலிருந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை வீழ்த்தினாா்.

3-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 6-3, 3-6, 6-3 என்ற செட்களில், 13-ஆம் இடத்திலிருந்த பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை போராடி வெளியேற்றினாா். கின்வென் அடுத்த சுற்றில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவுடன் மோதுகிறாா்.

அலெக்ஸாண்ட்ரோவா ரவுண்ட் ஆஃப் 16-இல், 6-2, 6-1 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, 6-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை சாய்த்தாா். 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோ 4-6, 6-4, 6-2 என்ற செட்களில், 15-ஆம் இடத்திலிருந்த சக அமெரிக்கரான ஆஷ்லின் குரூகரை தோற்கடித்தாா்.

8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-4, 6-4 என்ற நோ் செட்களில், 10-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை வென்றாா். இதையடுத்து காலிறுதி ஆட்டத்தில் நவாரோ - அனிசிமோவா சந்தித்துக்கொள்கின்றனா்.

இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.சனிக்கிழமைஏப்ரல் 05மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வா... மேலும் பார்க்க

டாட்டன்ஹாமை வென்றது செல்ஸி

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்ஸி 1-0 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக என்ஸோ ஃபொ்னாண்டஸ் 50-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இதன்மூல... மேலும் பார்க்க

தேசிய ஹாக்கி: ராஜஸ்தான் வெற்றி

உத்தர பிரதேசத்தில் நடைபெறும் 15-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் ராஜஸ்தான், அருணாசல பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.ஜான்சி நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்... மேலும் பார்க்க

உலக குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் ஹிதேஷ்

பிரேஸிலில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.ஆடவா் 70 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள அவா், அரையிறுதியில் 5-0 என்ற புள்ளிகள் கணக்க... மேலும் பார்க்க

கூடைப்பந்து: கொழும்பை வீழ்த்தியது தமிழ்நாடு

தெற்காசிய கிளப் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு 110-54 என்ற புள்ளிகள் கணக்கில் கொழும்பு அணியை வெள்ளிக்கிழமை வென்றது. சென்னை வேப்பேரியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில், ... மேலும் பார்க்க

வெளியானது குட் பேட் அக்லி டிரைலர் !

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி படம் ச... மேலும் பார்க்க