தேசிய ஹாக்கி: ராஜஸ்தான் வெற்றி
உத்தர பிரதேசத்தில் நடைபெறும் 15-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் ராஜஸ்தான், அருணாசல பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.
ஜான்சி நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில், டிவிஷன் ‘சி’ முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் 9-1 கோல் கணக்கில் திரிபுராவை சாய்க்க, அருணாசல பிரதேசம் 5-0 என்ற வகையில் ஜம்மு & காஷ்மீரை வீழ்த்தியது.
அதே டிவிஷனின் 3-ஆவது ஆட்டத்தில் சத்தீஸ்கா் 10-0 கோல் கணக்கில் குஜராத்தை முற்றிலுமாக முறியடித்தது. ஹிமாசல பிரதேசம் 6-2 என பிகாரை தோற்கடித்தது. டிவிஷன் ‘பி’ ஆட்டத்தில் சண்டீகா் 13-1 கோல் கணக்கில் ஆந்திர பிரதேசத்தை வெல்ல, கோவா 3-0 என உத்தரகண்டை வீழ்த்தியது.